Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

இந்த விலங்குகள் உங்கள் கனவில் வந்தா என்னென்ன பலன்கள் தெரியுமா?

A
Admin User
Journalist
March 18, 2022 4 min read 57 views
இந்த விலங்குகள் உங்கள் கனவில் வந்தா என்னென்ன பலன்கள் தெரியுமா?

பகலில் கனவு கண்டால அது பழிக்கும் என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள். நாம் காணும் அனைத்து கனவுகளுக்குமே பலன் உண்டு என்று நிச்சயமாக சொல்லிவிட முடியாது. ஆனால், குறிப்பிட்ட சில நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயமாக பலன் உண்டு. அந்த வகையில் நமது கனவில் குறிப்பிட்ட விலங்குகள் அதற்கு என்ன பலன் என்பதை இந்த கட்டுலையில் தெரிந்து கொள்ளலாம்…

நரி - நரி கனவில் வந்தால், சொந்த ஊரை விட்டுச் சென்று வேறு ஊரில் பிழைப்பு நடத்தவேண்டிய சூழல் வரும்.

குதிரை - குதிரை கனவில் வந்தால், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி உங்களுக்கு கிடைக்கும். குதிரையின் மீது ஏறி சவாரிசெய்வது போல கனவு வந்தால், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

பசு - கனவில் பசு நிலத்தில் மேய்வது போல கனவு வந்தால், புதிய சொத்துக்கள் வாங்கலாம். காளை மாடு துரத்துவது போல கனவு வந்தால், வீண் பிரச்சனைகள் வந்துசேரும்.

ஆடு - ஆடுகள் கனவுகளில் வந்தால், புதிதாக காரோ, பைக்கோ வாங்கப்போகிறீர்கள் என்று அர்த்தம்.

பாம்பு - பாம்பு கனவில் வந்தால், பெரிய அளவில் நமக்குத் தொல்லை தந்து வந்த கடன் பிரச்சனைகள் உங்களை விட்டு விலக போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நாய் - நாய்கள் குரைப்பது போல கனவு வந்தால், வீண்பழி வந்து சேரும்.

குரங்கு - குரங்குகள் கனவில் வந்தால், வீட்டிலோ, நண்பர்களிடமோ தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். கடன் பிரச்சனையும் அதிகரிக்கலாம்.

யானை - யானை நமது கனவில் வந்தால், நமக்குப் பெரும் செல்வம் ஏதோ ஒரு வகையில் கிடைக்கப்போகிறதென்று பொருள். யானையின் மீது உட்கார்ந்துகொண்டு சவாரிசெய்வது போல கனவு வந்தால், பதவிஉயர்வு அல்லது சொந்த வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.

மயில் - மயில் அகவுவது போல கனவு கண்டால், கணவன் மனைவி இடையே அன்பு மிகுதியாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடும்.

பறவைகள் - வானத்தில் கூட்டமாகப் பறவைகள் பறந்துசெல்வது போல கனவுகள் வந்தால், நெடுநாட்களாக இருந்து வந்த துன்பம் உங்களை விட்டு விலக போகிறது என்பதை உணர்த்தும். புதிய பதவி தேடி வரும். புகழ் கூடும்.

கிளி - கிளிகள் பறந்து, மரத்துக்கு மரம் மாறி உட்கார்ந்து செல்வது போல கனவு கண்டால், பால்ய நண்பர்களைச் சந்தித்து பேசி, மனம் லேசாகி, புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க