Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

புதன்-சுக்கிர சேர்க்கையால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமாக மாறப்போகிறது...

A
Admin User
Journalist
June 24, 2022 5 min read 135 views
புதன்-சுக்கிர சேர்க்கையால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமாக மாறப்போகிறது...

ஜோதிடத்தில் புதனுக்கும் சுக்கிரனுக்கும் தனி இடம் உண்டு. இந்த நேரத்தில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடைபெறவுள்ளது. புதன் மற்றும் சுக்கிரன் இரு கிரகங்களும் ரிஷப ராசியில் இணையவுள்ளனர். புதனும் சுக்கிரனும் ஒரே ராசியில் அமர்வதால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கக்கூடும். ஜோதிடத்தில், சுக்கிரன் மகிழ்ச்சி, திருமண மகிழ்ச்சி, ஆடம்பரங்கள், புகழ், கலை, திறமை, அழகு, காதல், காமம் ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக கூறப்படுகிறது. அதேசமயம், ஜோதிடத்தில், புதன் புத்தி, தர்க்கம், தகவல் தொடர்பு, கணிதம், புத்திசாலித்தனம் மற்றும் நண்பன் போன்றவற்றுக்கு காரணமான கிரகமாக கூறப்படுகிறது. சூரியனும் சுக்கிரனும் புதனின் நண்பர்கள், சந்திரனும் செவ்வாயும் அதன் எதிரி கிரகங்கள். புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அமோக பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன்-சுக்கிர சேர்க்கையாகும் இந்த காலக்கட்டத்தில் பொருளாதார பக்கம் மிகவும் வலுவானதாக மாறக்கூடும். மேலும், அவர்களது திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். சமய மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் உங்களுக்கு நாட்டம் அதிகரிக்கும். என்றும் இல்லாத அளவிற்கு நீங்கள் ஆன்மீக விஷயங்களில் அதிகம் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்களது வேலையில் வெற்றி பெறுவீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாகவே அமைய போகிறது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தை மிகவும் மங்களகரமானது என்று கூட சொல்லலாம். திடீர் நிதி லாபத்தினால் உங்கள் நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும். இதன் காரணமாக நிதி பக்கம் வலுவடைவதால் உங்கள் நிதி சிக்கல்கள் அனைத்தும் நீங்கிடும். அலுவலகத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். அதுமட்டுமின்றி, அலுவலகத்தில் உங்கள் பணியும் பாராட்டப்படும். தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசினால், குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பாதகமான சூழ்நிலையில் வாழ்க்கைத் துணையின் உதவினால் வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு நன்மைகள் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் வரப்பிரசாதமாக அமைய போகிறது. புதன் மற்றும் சுக்கிரனின் சிறப்பு ஆசிகளை கும்ப ராசிக்காரர்கள் பெறுவார்கள். பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான காலம் வந்துவிட்டது. கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். மாணவர்கள் தேர்வில் மகத்தான வெற்றி பெற்று அனைவராலும் பாராட்டப்படுவார்கள். வேலையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியதில்லை. கடினமாக வேலையையும் சுலபமாக முடிக்கும் உங்கள் திறன் அனைவராலும் பெரிதும் ஈர்க்கும்படியாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். திடீர் நற்செய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க