Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

சந்தனத்தை இப்படி யூஸ் பண்ணா காய்ச்சல் முதல் தலைவலி வரை பறந்து போய்டும்...

A
Admin User
Journalist
May 18, 2022 6 min read 60 views
சந்தனத்தை இப்படி யூஸ் பண்ணா காய்ச்சல் முதல் தலைவலி வரை பறந்து போய்டும்...

சந்தன மரத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இயற்கையாக வாசனை நிறைந்த பொருள் என்றால் அது சந்தனம். சந்தன மரத்தின் கட்டைகளை தேய்த்தாலே வீடே மணக்கும். இந்தியாவில் நெற்றியில் சந்தனத்தைப் பூசுவது பாரம்பரியம் மிக்க ஒன்றாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்து மத வழிபாட்டில் சந்தனத்துக்கு தனி முக்கியத்துவம் உண்டு. இது தவிர பல அழகு சாதனப் பொருட்களிலும் சந்தனம் பயன்படுத்தப்படுகிறது. சந்தன ஃபேஸ் பேக்குகள் முதல் வாசனை திரவியங்கள் மற்றும் ரூம் ஃப்ரெஷ்னர்கள் வரை சந்தனத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட எண்ணற்ற பொருட்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. இருப்பினும், மாறிவரும் வாழ்க்கை முறைக்கு மத்தியிலும், பலரும் நெற்றியில் சந்தன வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். சந்தனம் வைப்பது வெறும் நம்பிக்கையாக மட்டுமின்றி, உடல் சூட்டை தணிக்கும் இயல்பையும் கொண்டுள்ளது. இது தவிர, வேறு சில பண்புகளையும் சந்தனம் கொண்டுள்ளது. இப்போது இந்த கட்டுரையில் சந்தனத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்…

காய்ச்சலில் இருந்து நிவாரணம்

காய்ச்சல் பாதிக்கப்பட்டோரின் உடல் வெப்பநிலையைக் குறைக்க, குளிர்ந்த நீரின் ஒரு ஈரமான துண்டை நனைத்து அடிக்கடி தலையில் வைத்து எடுத்தால் உடலின் சூடு குறையும். ஈர துணியைப் போலவே காய்ச்சலைக் குறைப்பதற்கு மிகவும் உதவக்கூடிய ஒன்று தான் சந்தனம். உண்மையில், சந்தனத்தின் குளிர்ச்சியான பண்பு, காய்ச்சலைக் குறைக்க பெரிதும் உதவிடும். காய்ச்சல் அடிப்பவர்களின் நெற்றியில் சந்தனத்தை தேய்த்து நெற்றியில் பூசினால், அது ஒரு இயற்கை மருந்தாக செயல்படுகிறது. சந்தனத்தைப் பூசியதுடன் உடலின் வெப்பநிலை தணிக்கப்பட்ட உடல் சாதாரண வெப்பநிலைக்கு வந்துவிடும். சந்தன கட்டையானது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

பளபளக்கும் சருமம்

சந்தைகளில் விற்கப்படும் பெரும்பாலான அழகு சாதனப்பொருட்கள் சந்தனத்தை மையமாக கொண்டு தயாரிகக்கப்படுகின்றன. ஏனென்றால், சந்தனம் இயற்கையாக சரும அழகைப் பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இருப்பினும், சந்தைகளில் விற்கப்படும் அழகு சாதனப் பொருட்களில் பல்வேறு இரசாயனங்களின் சேர்க்கையுடன் தயாரிக்கப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், சருமத்தை மேம்படுத்த ரசாயனம் கலந்து பொருட்களுக்கு பதிலாக இயற்கை சந்தன கட்டையைப் பயன்படுத்துவது சிறந்தது அல்லது ஆர்கானிக் சந்தன பொடிகள் கிடைக்கின்றன. அவற்றை கவனமாக பார்த்து வாங்கி உபயோகிக்கலாம். அப்படி வாங்கிய சந்தனப் பொடியை ஃபேஸ் பேக் போல் செய்து பயன்படுத்தலாம். சந்தனத்துடன் ரோஸ் வாட்டர் அல்லது பால் போன்றவற்றை கலந்து பயன்படுத்துவது மாசு, மருவற்ற சருமத்தைப் பெற்றிட உதவும். இது சருமத்தில் ஒரு பளபளப்பைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல் நிறத்தில் ஏற்படும் கருமையைப் போக்கி வெண்மையாக ஜொலிக்கும் சருமத்தைத் தந்திடும்.

தலைவலியைப் போக்கும்

தலைவலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற சந்தனத்தை பயன்படுத்தலாம். இன்றைய காலக்கட்டத்தில் மாறுபட்ட வாழ்க்கை முறை, உணவு முறை, தூக்கிமின்மை, நீண்ட நேரம் கணினியின் வேலை பார்ப்பது, உடல் வெப்பம் என பல்வேறு காரணங்களால் தலை வலி பலருக்கு ஏற்படுகிறது. உடலின் வெப்பம் உங்கள் தலையின் நரம்புகளில் ஒரு நீட்சியை ஏற்படுத்தும் போது தலைவலியை உணரக்கூடும். இத்தகைய சூழலில், சந்தனத்தை தலையில் தடவுவது மூளைக்கு குளிர்ச்சியைத் தருவதோடு வலியையும் நீக்கிடும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க