கண்களின் அழகை பாதுகாக்க ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணலாமே!!!
Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)
ரோஜா பூ என்றாலே அழகு. அத்தகைய ரோஜா பூவின் இதழ்களை காய வைத்து நீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படுவது தான் ரோஸ் வாட்டர். இதனை பெரும்பாலானோர் வாசனை திரவியமாகவோ அல்லது அழகு பராமரிப்பிலோ பயன்படுத்துகிறார்கள். அத்தகயை ரோஸ் வாட்டரில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக, அழகு பராமரிப்பில் ரோஸ் வாட்டர் முக்கிய இடம் வகிக்கிறது. அதிலும், வீட்டு வைத்தியங்களில் ரோஸ் வாட்டரின் இடம் முக்கியமானது. இந்த ரோஸ் வாட்டர் சரும எரிச்சலை தணிக்கவும், மனச்சோர்வைக் குறைக்கவும், செரிமான பிரச்சனைகளை மேம்படுத்தவும் பலரும் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துகிறார்கள். மேலும், பலர் கண்களின் சோர்வை நீக்க ரோஸ் வாட்டரை உபயோகிக்கிறார்கள். இப்போது இந்த கட்டுரையில், ரோஸ் வாட்டரை கண்களை பாதுகாக்க எவ்வாறு மற்றும் எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்பதைப் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்…
கண் சிவத்தல்
ரோஸ் வாட்டரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே, இது கான்ஜுன்க்டிவிடிஸ் போன்ற கண் அழற்சி கோளாறுகளின் அறிகுறிகளைக் குறைக்க உதவும். இதனுடன் ரோஸ் வாட்டர் சிவந்திருக்கும் கண்களை சரிசெய்யவும் உதவுகிறது. உங்களுக்கு கண்களில் ஏதேனும் அழற்சி பிரச்சனை இருந்தால் ரோஸ் வாட்டரை வாங்கி பயன்படுத்துங்கள். ரோஸ் வாட்டர் எளிதாக அனைத்து கடைகளிலுமே கிடைக்கக் கூடியது தான்.
கருவளையங்களைக் குறைக்கும்
இன்றைய காலகட்டத்தில் கருவளையங்களால் அனைவரும் சிரமப்படுகின்றனர். மனஅழுத்தம், தூக்கமின்மை, நீண்ட நேரம் மொபைல், கம்ப்யூட்டர் பார்ப்பது, உடற்சோர்வு ஆகியவற்றால் கண்களை சுற்றிலும் கருவளையம் ஏற்படக்கூடும். கருவளையத்தால் பாதிக்கப்பட்ட உயிரற்ற கண்களை ஊட்டமளிக்க நீங்கள் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தினால், கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் குறைய தொடங்கி கண்கள் பளபளப்பாக மாறும்.
கான்ஜுன்டிவல் ஜெரோசிஸ் (Conjunctival xerosis)
கண்களின் சவ்வுகளில் வறட்சி ஏற்படும் பிரச்சனையை தான் கான்ஜுன்டிவல் ஜெரோசிஸ் என்கின்றனர். இது, பெரும்பாலும் வைட்டமின் ஏ பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய பிரச்சனை. ரோஸ் வாட்டருக்கு இயற்கையாகவே வறட்சி மற்றும் எரிச்சல் தன்மையைக் குறைக்கும் தன்மை உள்ளதால் கான்ஜுன்டிவல் ஜெரோசிஸ் பிரச்சனையை சரிசெய்ய ரோஸ் வாட்டரை தாராளமாக பயன்படுத்தலாம்.
கண் அழுக்குகளை நீக்கும்
தற்போதைய மாசடைந்த சூழலில் வெளியில் சென்றாலே கண்களில் மாசு, தூசு, மண் விழுவது சாதாரணமாகி விட்டது. சில சமயங்களில் கண்களில் விழக்கூடிய தூசு நமக்கு தெரியாமலேயே கூட இருக்கக்கூடும். அவை நம் விரல்களிலோ அல்லது சாதாரண தண்ணீரிலோ அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கண்களில் சில துளிகள் ரோஸ் வாட்டரை வைத்தால், அது உடனே பலனளிக்கும்.
கண்களுக்கு ரோஸ் வாட்டரை எப்படி பயன்படுத்துவது?
- காலை அல்லது இரவில் உங்கள் முகத்தை சுத்தம் செய்யும் போது, ரோஸ் வாட்டரால் கண்களை கழுவலாம். இப்படி செய்து வர கண்களில் அழுக்குகள் தங்காது.
- உங்கள் கண்களில் வறட்சி, தொற்று அல்லது வீக்கம் இருந்தால், சில துளிகள் பாதிக்கப்பட்ட கண்ணில் விட்டு ஒரு 5 நிமிடத்திற்கு கண்ணை மூடிய படி அப்படியே உட்காரவும்.
- கண் கருவளையத்தைப் போக்க, ஒரு சிறிய பஞ்சு உருண்டையை ரோஸ் வாட்டரில் நனைத்து, அதை கண்களில் மேலே வைத்த படி 20 நிமிடங்களுக்கு உட்காரவும். இவ்வாறு செய்து வர கருவளையம் குறையத் தொடங்கும்.