உங்கள் மேல எப்பவும் வியர்வை நாற்றம் வீசுதா? இனி அந்த கவலையே வேணாம்...
Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)
நாம் எல்லாருமே எப்பவுமே நல்ல வாசமா ஜம்முனு இருக்கனும்னு தான் ஆசைபடுவோம். ஆனா, எத்தன தடவ குளிச்சலாலும் இந்த வியர்வை சாத்தம் நம்ம ஆசையெல்லாத்தையும் கெடுத்துடும். நம்ம என்ன தான் சென்ட், பெர்ஃபியூம் போடுகிட்டாலும் அதயும் மீறி இந்த வியர்வை நாத்தம் அடிக்க தான் செய்யும். இந்த மாதிரி டியோடரண்ட் யூஸ் பண்ணா, அதுல இருக்குற பாராபீன், அலுமினியம் நம்ம உடம்புக்கு பல வழிகள்ல தீங்கு விளைக்கக்கூடும் அப்டினு சொல்றாங்க. சிலருக்கு இதனால அரிப்பு, சரும அழற்சி பிரச்சனைலாம் கூட ஏற்படக்கூடும். இதுக்கு காரணம் எல்லாமே அதுல இருக்குற கெமிக்கல் தான். சரி, உடலில் இருந்து வீசும் வியர்வை நாற்றத்தை போக்க நம்ம வீட்டு சமையல் அறையில் இருக்குற பொருட்களலே யூஸ் பண்ணலாம்னா சென்ட் வாங்குற செலவு மிச்சம் தானே…? வாங்க இப்ப வியர்வை நாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும் இயற்கை பொருட்கள் என்னென்ன, அத எப்படி யூஸ் பண்றதுனு தெரிஞ்சுக்கலாம்…
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றில் உள்ள அசிட்டிக் அமிலம் இயற்கையாக ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை. எனவே எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து, அக்குள் மற்றும் உங்களுக்கு அதிகம் வியர்க்கும் பகுதியில் தடவினால், வியர்வை நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரிக்கள் அழிக்கப்பட்டு, உடலில் அதிகமாக வியர்வை நாற்றம் வீசுவது தடுக்கப்படும். ஆனால் ஷேவிங் செய்த பின்னரோ அல்லது அப்பகுதியில் ஏதேனும் காயங்கள் இருந்தாலோ, எலுமிச்சை சாற்றினை பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால் கடுமையான எரிச்சலை சந்திக்க நேரிடும்.
பேக்கிங் சோடா
சமையலறையில் காணப்படும் மற்றொரு பொதுவான பொருள் தான் பேக்கிங் சோடா. பேக்கிங் சோடாவை சிறிது எடுத்து நீர் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு பங்கு பேக்கிங் சோடாவுடன், 6 பங்கு சோள மாவு சேர்த்து கலந்து, அதை அக்குளில் பவுடர் மாதிரி தடவிக் கொள்ளலாம். இந்த வழி சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு மிகவும் ஏற்றது.
தேங்காய் எண்ணெய்
சுத்தமான தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளதால், இது வியர்வை நாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறந்தது. அதற்கு தேங்காய் எண்ணெயை குளித்த பின் அக்குளில் தடவி, பின் உடையை உடுத்த வேண்டும். மற்றொரு வழி, தேங்காய் எண்ணெயை பேக்கிங் சோடாவுடன் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை அக்குளில் தடவலாம். இல்லாவிட்டால் பேக்கிங் சோடா மற்றும் சோள மாவை சரிசம அளவில் எடுத்து, தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். பின் அந்த கலவையை தினமும் குளித்து முடித்த பின் அக்குளில் தடவவும்.
கல் உப்பு
கல் உப்பில் சுத்தப்படுத்தும் பண்புகள் உள்ளதால், இது வியர்வையை தடுப்பதோடு, வியர்வை நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கும். அதற்கு சிறிது கல் உப்பை வெதுவெதுப்பான நீரில் போட்டு, நன்கு கரைந்த பின் அந்நீரால் குளிக்க வேண்டும். இதனால் வியர்வை கட்டுப்படுவதோடு, உடல் துர்நாற்றமும் தடுக்கப்படும்.
தக்காளி ஜூஸ்
நம்ம எல்லார் வீட்லயுமே தக்காளி டெய்லி யூஸ் பண்ணுவோம். அந்த தக்காளி அதிகப்படியான வியர்வையைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதுனு உங்களுக்கு தெரியுமா? அதோடு இது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களையும் அழிக்கக்கூடியது. எனவே, உங்கள் மீது வியர்வை நாற்றாம் அதிகமாக வீசினால், தக்காளி சாற்றினை ஒரு துணியில் நனைத்து பிழிந்து அக்குள் மற்றும் வியர்வை துர்நாற்றம் வீசும் பிற இடங்களில் சிறிது நேரம் வைத்திருங்கள். பின்னர், அக்குளைக் கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் சருமத் துளைகள் மூடப்பட்டு, அதிக வியர்வை தடுக்கப்படும்.