ஆன்மீகம்

வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கு நீங்கள் செய்யும் இந்த சிறு தவறுகள் கூட காரணமாக இருக்கலாம்…

A
Admin User
1 min read
வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கு நீங்கள் செய்யும் இந்த சிறு தவறுகள் கூட காரணமாக இருக்கலாம்…
Advertisement
Editor's Choice
Affiliate link

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

பொதுவாகவே, ஒவ்வொரு வீட்டிலும் தினந்தோறும் விளக்கேற்றி, தெய்வ வழிபாடு செய்து வர வேண்டியது அவசியம். அப்போது தான் வீட்டில் மகாலட்சுமி குடி புகுவாள் என்பவர். ஆனால், அப்படியெல்லாம் செய்தும் சிலரது இல்லங்களில் செல்வ பெருக்கு இல்லாமல், கையில் தனம் சேராமல் இருக்கிறது என்று கவலையடைவது உண்டு. இவற்றிற்கெல்லாம், சில காரணங்கள் இருக்கக்கூடும். வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கு நாம் செய்யக்கூடிய சிறு சிறு தவறுகளும் காரணமாக இருக்கலாம். அப்படி, செல்வ வளத்தை தடுக்கும் சில செயல்களை பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்…

*.வீடு, வாசல் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டில் ஒட்டடை இருக்கவே கூடாது. அப்படி இருந்தால், அந்த வீட்டில் செல்வம் சேராது.

*வீட்டின் லட்சுமி என்பவள். அந்த வீட்டில் குடியிருக்கும் பெண்களை குறிக்கும். எனவே, வீட்டு பூஜை அறையில் பெண்கள் தான் விளக்கு ஏற்ற வேண்டும். ஆண்கள் விளக்கேற்றினால் செல்வம் சேராது என்பவர்.

*வீட்டில் கரையான் புற்று கட்டினாலோ, பூரான் அடிக்கடி வந்தாலோ செல்வம் சேராது. எனவே, வீட்டில் இவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

*சமையறை என்பது வீட்டின் மிக முக்கியமான இடம். அதனை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள தவறாதீர்கள். அதிலும். எச்சில் பாத்திரங்களை சேர்த்து வைக்க கூடாது. அப்படி எச்சில் பாத்திரம் சேரும் வீட்டிலும் செல்வம் சேராது. உடனுக்குடன் பாத்திரத்தை தேய்த்து விடுவதே நல்லது.

*குறிப்பாக, சமையலையில் உள்ள பொருட்கள் முழுவதுமாக காலியாக விடக்கூடாது. அதிலும். அரிசி, உப்பு, பால், சர்க்கரை போன்றவை தீர்ந்து போவதற்கு முன்பு வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.

*இருள் சூழ்ந்த இடத்தில் தேவி இருக்க மாட்டாள். எனவே, வீட்டை எப்போதும் இருள் சூழ விடக் கூடாது. சிறு விளக்காவது எரிய வேண்டும். இல்லையென்றால், செல்வ வளம் பெருகாது.

*தானம் கேட்பவர்களுக்கு இல்லை என்ற பதிலை ஒரு போதும் கூறிவிடாதீர்கள். அதற்கு பதிலாக வேறு ஏதேனும் கூறி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்திடுங்கள். எதிர்மறை சொற்கள் பயன்படுத்துபவர்களது இல்லங்களில் செல்வம் சேராது என்பர்.

Advertisement

Read Next