Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

மே 14ம் தேதி வரை இந்த ராசிக்காரர்கள் ரொம்ப உஷாரா இருக்கனும்...

A
Admin User
Journalist
April 16, 2022 5 min read 50 views
மே 14ம் தேதி வரை இந்த ராசிக்காரர்கள் ரொம்ப உஷாரா இருக்கனும்...

தற்போது மேஷ ராசியில் இருக்கும் சூரிய பகவான் வரும் மே 14ம் தேதி வரை அங்கிருப்பார். ஜோதிட சாஸ்திரத்தில் சூரிய பகவானுக்கென்று தனி இடம் உள்ளது. எப்போது சூரிய பகவான் சாதகமான இடத்தில் வீற்றிருக்கிறாரோ அப்போது சுப பலன்களை தந்திடுவார். அதுவே, பாதகமான இடத்தில் வீற்றிருக்கும் போது சில ராசிக்காரர்கள் மிகுந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் மேஷ ராசியில் சூரியபகவான் இருப்பது சில ராசிகளில் அசுப பலன்களை ஏற்படுத்த போகிறது. எனவே, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ராசிக்காரர்கள் மே மாதம் 14ஆம் தேதி வரை கூடுதல் கவனத்துடன செயல்பட வேண்டியது அவசியம். அதைப்பற்றி தான் இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். உங்கள் ராசியும் இந்த பட்டியலில் உள்ளதாக என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

ரிஷபம்
மேஷத்தில் சூரியன் இருப்பது உங்கள் ராசிக்கு அவ்வளவு சிறப்பான பலன்களை தந்திடாது. உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் வாகனத்தை மிகவும் வேகமாக ஓட்ட வேண்டாம். உங்கள் திருமண வாழ்வில் திடீர் பிரச்சனைகள் வரலாம். இந்த காலக்கட்டத்தில் எந்த பண பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம். இந்த நேரத்தில் செய்யும் முதலீடு உங்களுக்கு நஷ்டத்தையே ஏற்படும். மேலும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட முயற்சியுங்கள். மேலும், புத்திசாலித்தனமாக பணத்தைச் செலவிடுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த காலக்கட்டத்தில் வாக்குவாதங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. இந்த நேரத்தில் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். யாரிடம் தேவையில்லாமல் கோபப்பட வேண்டாம். இல்லையெனில், உங்கள் கோபமே உங்களை காயப்படுத்தலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு இந்த காலக்கட்டத்தில் லாபம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இந்த நேரத்தில் பணத்தை புத்திசாலித்தனமாக மட்டுமே செலவிடுங்கள். மேலும், எந்தவொரு பணபரிவர்த்தனையும் மே 14ம் தேதி வரை செய்ய வேண்டாம். புதிய முதலீடு செய்வதற்கும் இந்த நேரம் ஏற்றதல்ல.

மகரம்
வேலையில் வெற்றி பெற மகர ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் மிக கடுமையாக உழைக்க வேண்டும். மேலும், இந்த நேரத்தில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். நிதி நிலையைப் பொறுத்தவரை இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். இருந்தாலும், புத்திசாலித்தனமாக பணத்தை செலவிட்டால் நல்லது. இந்த நேரத்தில் எந்தவொரு பண பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு திடீர் பிரச்சனைகள் தோன்றி மன அழுத்தத்தை உருவாக்கலாம். மேலும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட முயற்சியுங்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உணவில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க