Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
பயணம்

எந்த தொந்தரவும் இல்லாமல் தேனிலவு கொண்டாட இந்த 5 இடங்கள் தான் சிறந்தவை!!!

A
Admin User
Journalist
March 03, 2022 5 min read 90 views
எந்த தொந்தரவும் இல்லாமல் தேனிலவு கொண்டாட இந்த 5 இடங்கள் தான் சிறந்தவை!!!

திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாக இப்போதெல்லாம் எங்கே தேனிலவு செல்ல வேண்டுமென்பதை புது மண தம்பதியினர் திட்டமிடுகின்றனர். ஒரு வேளை, நீங்கள் தேனிலவு எங்கே செல்வதென்று யோசித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் எந்தவித தொந்தரவும் இல்லாமல், தனிமையில் சந்தோஷமாக தேனிலவு கொண்டாட விரும்பினால், இந்த இடங்கள் அதற்கு உகந்ததாக இருக்கும். நீங்கள் போகவில்லை என்றாலும், பிறருக்கு இந்த இடங்களை தாராளமாக பரிந்துரைக்கலாம். வாருங்கள், இப்போது இந்தியாவில் இருக்கக்கூடிய தேனிலவுக்கென்றே பெயர் போன 5 இடங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்…

ஹெமிஸ் (Hemis of Leh)

லடாக்கில் இருக்கக்கூடிய லே மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஹெமிஸ் நகரம். கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இந்த நகரம் அமைந்துள்ளது என்றே சொல்லலாம். இந்த இடம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட சிறப்பான இடமாக இருக்கும். இங்கு அமைந்துள்ள ஹெமிஸ் மடாலயம், மக்கள் அனைவரும் ஈர்க்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.

கௌசனி (Kausani)

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்றழைக்கப்படும் நகரம் தான் கௌசனி. இது உத்தரகண்ட் மாநிலம் பாகேஸ்வர் மாவட்டத்திவ் அமைந்துள்ள மலை பிரதேசம். இந்த இடம் அல்மோராவிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அமைதியான சூழல் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தேனிலவைக் கொண்டாட விரும்பினால், அதற்கு கௌசனி ஏற்ற இடமாக இருக்கும்.

மெளசின்ராம் (Mawsynram)

மௌசின்ராம் மேகாலயாவில் இருக்கக்கூடிய மிகச்சிறந்த இடமாகும். உண்மையில், இந்த இடத்திற்கு நீங்கள் ஒருமுறை சென்றால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவம் கிடைக்கும். மக்கள் தொகை குறைவாக இருப்பதால் அமைதியான மற்றும் பசுமையான நகரமாக இந்த இடம் திகழ்கிறது. அதிலும், தேனிலவிற்கு செல்ல ஏற்ற இடமாகவும் விளங்குகிறது. இந்தியாவில் இப்படி ஒரு நகரமா என்ற வியப்பு ஏற்படுவது சாதாரணம் தான். பூலோக சொர்க்கம் என்று இதை சொன்னால் கூட மிகையாகாது.

பெல்லிங் (Pelling)

இந்தியாவின் மேற்கே அமைந்துள்ள பெல்லிங் சுமார் 2150 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பிரதேசம். நீங்கள் காங்டாக்கைப் பார்க்கப் போகிறீர்கள் என்றால், பெல்லிங்கிற்கு மறக்காமல் சென்று வாருங்கள். அழகான பனி பிரதேசமான இந்த நகரத்திற்கு தேனிலவு சென்றால் வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றிடலாம். அதிலும், இங்கு கஞ்சன்ஜங்கா மேலே உதிக்கும் சூரியனைப் பார்ப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

கஜ்ஜியார் (Khajjiar)

கஜ்ஜியார் என்பது ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவிற்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். எழில் கொஞ்சும் இயற்கை சூழலுக்கு மத்தியில் வாழ்க்கைத் துணையுடன் பொழுதைக் கழித்திட எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படி பொழுதை கழித்தவர்கள் அடிக்கடி இந்த இடத்திற்கு போவதை வழக்கப்படுத்தி கொள்ளும் அளவிற்கு அதன் அழகில் மயங்கிடுவர். இயற்கையை விரும்பும் எவரும் இந்த இடத்திற்கு போகாமல் இருக்க மாட்டார்கள். எனவே, உங்கள் தேனிலவிற்கு இந்த இடம் நிச்சயமாக ஏற்றதாக இருக்கும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்கள்: குறைந்த செலவில் ஒரு சொர்க்கப் பயணம்!
வாசிக்க