Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
பயணம்

குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா போகனும்னா இந்த இடங்களுக்கு போய்ட்டு வாங்களேன்...

A
Admin User
Journalist
April 08, 2022 6 min read 100 views
குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா போகனும்னா இந்த இடங்களுக்கு போய்ட்டு வாங்களேன்...

நீங்கள் ஊர் சுற்ற விரும்பும் நபரா? வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் எங்காவது சென்று புதிய இடங்களைப் பார்க்க வேண்டும் ஆனால் நிறைய செலவு ஆக கூடாது. இப்படி ஏதேனும் உங்களுக்கு ஆசையிருந்தால் இந்த கட்டுரை நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். குறைந்த பட்ஜெட், மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்க இந்தியாவில் உள்ள இந்த இடங்கள் நிச்சயம் பொருத்தமாக இருக்கும். வாருங்கள், அவற்றைப் பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்…

ரிஷிகேஷ் (Rishikesh)

ரிஷிகேஷ் என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரகாண்டில், கங்கை நதிக்கரையில் இமயமலை அடிவாரத்தில் உள்ள ஒரு நகரம். ஹரித்வாருக்கு அருகில் அமைந்துள்ள, உலகின் யோகா தலைநகரம் என்றும் அழைக்கப்படும் ரிஷிகேஷ், தனிமையாக பயணம் செய்வதற்கு ஏற்ற சிறந்த இடங்களில் ஒன்றாகும். நீங்கள் இங்கு ரிவர் ராஃப்டிங், பங்கி ஜம்பிங், கேம்பிங் மற்றும் பல சாகச நடவடிக்கைகளை அனுபவிக்கலாம்.

ஜெய்ப்பூர் (Jaipur)

குறைந்த செலவில் சுற்றுலா செல்ல விரும்பினால் பிங்க் சிட்டி என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூருக்கு தாராளமாக செல்லலாம். இங்கு வளமான பாரம்பரியம் மற்றும் பல நினைவுச் சின்னங்கள், கட்டமைப்புகள் உள்ளன. இதனுடன், அனைவருக்கும் தொடர்புடைய ஒரு சுவாரஸ்யமான கதையும் இங்கே உள்ளது. ஒருவேளை நீங்கள் வரலாற்று சிறப்புமிக்க கதைகளை கேட்டறிவதிலும், பார்ப்பதிலும் ஆர்வமிக்கவராக இருந்தால் கண்டிப்பாக இங்கு செல்ல வேண்டும். இங்கே சென்று வருவது மன்னர் கால அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும்.

வாரணாசி (Varanasi)

உத்திரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள வாரணாசி பனாரஸ் என்றும், காசி என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் இங்கே சென்று வருவதால் மன நிம்மதியாக உணரலாம். அதுமட்டுமின்றி, இங்கு பலவகையான சுவையான உணவுகளையும் அனுபவிக்க சாப்பிடலாம். குறைந்த செலவில் சென்று வருவதற்கு வாரணாசியும் ஏற்ற இடம். சிறந்த அனுபவத்தைப் பெறலாம்.

பிர் பில்லிங் (Bir Billing)

பிர் என்பது வட இந்தியாவில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஜோகிந்தர் நகர் பள்ளத்தாக்கின் மேற்கில் அமைந்துள்ள ஒரு சிறி கிராமமாகும். நீங்கள் பாராகிளைடிங் செய்ய விரும்பினால், இந்த இடம் உங்களுக்கு ஏற்றது. இங்கே நீங்கள் வார இறுதி நாட்களை மகிழ்ச்சியாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு கொண்டாடலாம், அதுவும் குறைந்த செலவில். சாகசம் பிடிக்கும் என்றால் இந்த இடமும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

உதய்பூர் (Udaipur)

உதய்பூர் ஒரு சுற்றுலாத் தலமாகும். மேலும் அதன் வரலாறு, கலாச்சாரம், இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் மற்றும் மன்னர் கால அரண்மனைகளுக்கு பெயர் பெற்றது. அதன் அதிநவீன ஏரி அமைப்பு காரணமாக இது "ஏரிகளின் நகரம்" என்று பிரபலமாக அறியப்படுகிறது. ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் அழகான ஆரவல்லி மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஆம் அது பல மயக்கும் ஏரிகளைக் கொண்டுள்ளது. அற்புதமான கட்டிடக்கலை, அழகிய கோயில்கள் மற்றும் இயற்கை அழகு ஆகியவை உங்கள் மனதை நிச்சயம் கவரும்.

மணாலி (Manali)

மணாலி இந்தியாவின் வடக்கு இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு உயரமான ஹிமாலயன் ரிசார்ட் நகரமாகும். இது ட்ரெக்கிங் மற்றும் தேனிலவுக்கு புகழ் பெற்ற இடமாகும். மணாலி ஒரு அதிசய பூமியாக திகழ்கிறது. இயற்கை ஆர்வலர்கள், சாகச ஆர்வலர்கள் மற்றும் மலையேற்றம் செய்பவர்களுக்கு இது சரியான இடமாகும். மேலும் நீங்கள் ஐஸ் ஸ்கேட்டிங், பாராகிளைடிங், பனிச்சறுக்கு மற்றும் பல சாகச செயல்களை இங்கே அனுபவிக்கலாம்.

கசோல் (Kasol)

கசோல் என்பது இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமாகும். இது பார்வதி பள்ளத்தாக்கில், பார்வதி நதிக்கரையில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகரில் நீங்கள் குறைந்த செலவில் சிறந்ததோர் அனுபவத்தைப் பெற்றிடலாம்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்கள்: குறைந்த செலவில் ஒரு சொர்க்கப் பயணம்!
வாசிக்க