சுவையான பன்னீர் புலாவ்!!!
FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White
வெரைட்டி ரைஸ் என்றாலே வேலை குறைவு தான். அதிலும் புலாவ் வகைகளை கூற வேண்டுமென்றால், இன்னும் சுலபம். புலாவ் வகைகளிலேயே வேகமாக செய்து முடிக்க கூடியது தான் பன்னீர் புலாவ். மிகவும் எளிமையானது, ஆனால் சுவையோ அற்புதமானது. ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்து கொடுக்கமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். வேலைக்கு செல்லும் போது, அவசர காலங்களில் எல்லாம் செய்ய ஏற்ற ரெபிசி இது. பேச்சலர்ஸ் கூட எந்தவித முன்னனுபவமும் இல்லாமல் சுவையாக செய்திட முடியும். வாருங்கள் இப்போது பன்னீர் புலாவ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்:
பன்னீர் – 200 கிராம் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
பாசுமதி அரிசி – 1 கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 1 சிறியது
கிராம்பு – 4
பிரியாணி இலை – 1
வெங்காயம் – 2 பெரியது (நீளமாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை – சிறிதளவு
புதினா – சிறிதளவு
தண்ணீர் – 2 கப்
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
*முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அளவு அரிசியை நன்கு கழுவி, 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
*அடுத்ததாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும் எண்ணெய், நெய் சேர்க்கவும். அவை சூடானதும் பன்னீரை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
*இப்போது அதே பாத்திரத்தில் முழு மசாலா பொருட்களை போட்டு தாளிக்கவும்.
*அத்துடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
*அடுத்ததாக, கீறிய பச்சை மிளகாய், கேரட் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வதக்கவும்.
*பின்பு, குறிப்பிடப்பட்டுள்ள நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
*தண்ணீர் நன்கு கொதித்த பின்னர், கழுவி ஊற வைத்த அரிசியை சேர்க்கவும்.
*தண்ணீர் முழுவதையும் அரிசி உள்ளிழுத்து வரும் நிலை வரை அடுப்பை முழு தீயில் வைத்து பார்த்துக் கொள்ளவும்.
*தண்ணீர் முழுவதும் உறிஞ்சப்பட்ட பிறகு, அடுப்பை முழுவதுமாக குறைவான தீயில் வைத்திடவும்.
*அத்துடன், வறுத்து எடுத்து வைத்துள்ள பன்னீர் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.
*10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விட்டு, பாத்திரத்தை இறக்கி கீழே அப்படியே ஒரு 10 நிமிடங்களுக்கு வைத்து விடவும்.
*பிறகு பாத்திரத்தை திறந்தால் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், உதிரி உதிரியாக அற்புதமாக இருக்கும்.
*சூடான புலாவை, காரசாரமான எந்தவொரு கிரேவியுடன் பரிமாறினாலும் சுவை அருமையாக இருக்கும்.