Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

மணமணக்கும் தமிழ்நாடு ஸ்டைல் பிசிபேளாபாத்…

A
Admin User
Journalist
December 07, 2021 5 min read 55 views
மணமணக்கும் தமிழ்நாடு ஸ்டைல் பிசிபேளாபாத்…

பிசிபேளாபாத் என்றாலே கர்நாடகம் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். அந்த கர்நாடக ஸ்டைல் பிசிபேளாபாத் பெரும்பாலான தமிழர்களுக்கு பிடிப்பதில்லை. எனவே, நமக்கு பிடித்த சுவையில் மிகவும் எளிமையான முறையில், தமிழ்நாடு ஸ்டைல் பிசிபேளாபாத் செய்து சாப்பிடலாம். இதற்கென்று தனி மசாலா பொடி ஒன்று அரைக்க தேவையில்லை. வீட்டில் உள்ள குழம்பு மிளகாய் தூளே போதுமானது. வாருங்கள், இப்போது தமிழ்நாடு ஸ்டைல் சிம்பிள் பிசிபேளாபாத் எப்படி செய்வதென்று பார்க்கலாம்…

தேவையானப் பொருட்கள்:

அரிசி – ஒரு கப்

துவரம் பருப்பு – ½ கப்

சின்ன வெங்காயம் – 10

தக்காளி – 2

குழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

புளி – நெல்லிக்காய் அளவு

உப்பு – சுவைக்கேற்ப

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்

செய்முறை:

*முதலில் அரிசியை கழுவி ஊற வைத்துக் கொள்ளவும். குறிப்பிடப்பட்டுள்ள அளவு பருப்பை குக்கரில் போட்டு நீர் ஊற்றி 2 விசில் விட்டு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*பின்னர், ஒரு குக்கரை அடுப்பில் வைத்து ஒரு கப் அரிசிக்கு 4 கப் நீர் என்ற விகிதத்தில் நீர் சேர்த்து ஊற வைத்த அரிசி மற்றும் வேக வைத்து எடுத்த பருப்பை ஒன்றாக சேர்க்கவும். குக்கரை 4 விசில் விட்டு, பின்னர் 10 நிமிடத்திற்கு குறைவான தீயில் வைத்து பின்பு இறக்கி வைக்கவும்.

*குக்கரின் விசில் போகும் நேரத்திற்குள், மசாலா கலவையை செய்து விடலாம்.

*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றவும்.

*எண்ணெய் சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் அதில் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்க்கவும்.

*பின்னர், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

*வெங்காயம் நன்கு வெந்தவுடன் தக்காளி சேர்க்கவும்.

*தக்காளி மசிந்து நன்கு வெந்தவுடன், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும்.

*அடுத்ததாக, தயாரித்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி, மசாலாவிற்கு ஏற்ற உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

*மசாலா மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீராகவும் இல்லாமல் மிதமான பக்குவதத்தில் இருக்க வேண்டியது அவசியம்.

*மசாலா கலவை பச்சை வாசனை அனைத்தும் நீங்கி தயாரானவுடன், குக்கரை திறந்து, நன்கு மசிந்து வெந்த அரிசி, பருப்புடன் சேர்த்து கிளறி விடவும்.

*கிளறிய சாதம் மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை கொதிக்க வைத்து உடன் சேர்த்து கிளறவும். கொதிக்கும் நீரை சேர்த்தால் மட்டுமே சாதத்தின் சுவை மாறாமல் இருக்கும்.

*இறுதியாக, சாதத்தின் மீது 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கிளறினால், அட்டகாசமான பிசிபேளாபாத் சுவைக்க தயார்.

*விருப்பப்பட்டால் இத்துடன், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், காளிஃப்ளவர் போன்ற காய்கறிகளையும் மசாலா கலவை தயாரிக்கும் போது உடன் சேர்த்துக் கொள்ளலாம்.

*மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய இந்த பிசிபேளாபாத்தை, ஒருமுறை செய்து பாருங்கள். பின்னர், அடிக்கடி செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்களே கேட்பார்கள்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க