Sunday, May 10, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

டிராவல் பண்ணும் போது வாந்தி எடுக்குற ஆளா நீங்க? அப்ப இது உங்களுக்கானது....

A
Admin User
Journalist
January 22, 2022 5 min read 78 views
டிராவல் பண்ணும் போது வாந்தி எடுக்குற ஆளா நீங்க? அப்ப இது உங்களுக்கானது....

பயணம் செய்வது யாருக்கு தான் பிடிக்காது. ஆனால், ஒரு சிலருக்கு பயணம் செய்யும் போது வாந்தி எடுக்கும் பழக்கம் இருப்பதால் பயணம் செய்வதைத் தவிர்த்து விடுவர். கார், பஸ், ரயில் என குறிப்பிட்ட சில வாகனங்களில் சென்றால் இவர்கள் நிச்சயம் கையில் பிளாஸ்டிக் கவர் இருப்பதையும், ஜன்னலோர இருக்கையில் அமர்வதையும் உறுதிப்படுத்தி கொள்வர் அல்லது பயணம் முடியும் வரை எதையும் சாப்பிடாமல் நேரத்தைக் கடத்தி விடுவர். இனி அந்த கவலையே வேண்டாம். இப்போது நாம் பயண நேரத்தில் வரக்கூடிய வாந்திக்கான வீட்டு வைத்தியங்களை தான் பாரக்க போகிறோம்…

புதினா
புதினா வாந்தியைத் தடுக்கும் சில பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, நீங்கள் பயணம் செய்ய போகிறீர்கள் என்றால், புதினா எண்ணெயை உடன் எடுத்து செல்லுங்கள். இது வாந்தியைத் தடுக்க உதவுவதில் சிறந்தது. ஒருவேளை பயணத்தின் போது வாந்தி எடுத்தால், சிறிது பஞ்சு உருண்டையில் சில துளிகள் புதினா எண்ணெயை ஊற்றி, அவ்வப்போது அதை முகர்ந்து பார்க்கவும். இப்படி செய்வதால் வாந்தி வராமல் இருக்கும்.

கிராம்பு
வாந்தியைத் தடுப்பதில் கிராம்பு மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, உங்கள் வாயில் ஒரு கிராம்பை வைத்து கொள்ளவும். இதனால் விரைவான நிவாரணம் கிடைக்கும். இது குமட்டலை நிறுத்தி, புத்துணர்ச்சியைக் கொடுக்கும். கிராம்பு வாயின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

இஞ்சி
இஞ்சி சாப்பிட்டாலும் வாந்தி வராது. ஆம், அதைப் பயன்படுத்துவதால் எந்தச் சுற்றும் பிரச்சனையும் வராது. இதற்கு, நீங்கள் குடிக்கும் டீயில் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு வேளை உங்களுக்கு அது பிடிக்கவில்லை என்றால் ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு கொள்ளுங்கள். வாந்தி வருவதற்கான அறிகுறி ஏதேனும் தோன்றும் பட்சத்தில், வாயில் இருக்கும் இஞ்சியின் சாற்றை உறிஞ்சவும். இதனால் வாந்தி வராது.

எலுமிச்சை
சாதாரணமாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் வாந்திக்கு மருத்துவம் எலுமிச்சை உட்கொள்வது. எலுமிச்சை சாப்பிட்டால் வாந்தி வராமல் தடுக்கலாம். உண்மையில், இதில் உள்ள சிட்ரிக் அமிலம் குமட்டல் பிரச்சனையை உடனடியாக நீக்குகிறது. அதற்கு நீங்கள் வெந்நீரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து சிறிது உப்பு சேர்த்து குடிக்கலாம். பயணத்தின் போது எலுமிச்சை பழத்தை உடன் வைத்துக் கொள்ளுங்கள். குமட்டல் தொடங்கும் போது எலுமிச்சையின் நறுமணத்தை உறிஞ்சவும். இப்படி செய்வதால் வாந்தி வராது.

ஏலக்காய்
உங்களுக்கு குமட்டல் பிரச்சனை இருந்தால், ஏலக்காய் விதைகளை உங்கள் வாயில் வைத்திருப்பது மிகுந்த நன்மை பயக்கும். ஆமாம், ஏலக்காய் உண்மையில் மிகவும் பயனுள்ள ஒன்று. இதை மென்று சாப்பிடுவதால் வாயின் ஆரோக்கியமும் மேம்படும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,150
தங்கம் (24k)
1 கிராம்
₹14,858
வெள்ளி
1 கிராம்
₹280
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நலமான வாழ்விற்கு எது மிக முக்கியம்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க