Thursday, August 27, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

காதுகளை சுத்தம் செய்யலனா இவ்ளோ பிரச்சனை வருமா?

A
Admin User
Journalist
January 03, 2022 4 min read 161 views
காதுகளை சுத்தம் செய்யலனா இவ்ளோ பிரச்சனை வருமா?

பொதுவாக அனைவருமே காதில் அரிப்பு ஏற்பட்டால், உடனடியாக கையில் கிடைக்கம் சாவி அல்லது கூர்மையான எதையானது காதிற்குள் விட்டு சுத்தம் செய்ய தொடங்கிவிடவர். இதுபோன்ற செய்வதால் காதுகள் பாதிக்கப்பட்டு சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். காது கேட்காமல் போவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. மனித உடலில் மிகவும் மென்மையான பாகங்களில் காதும் ஒன்று. எனவே, அதனை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இப்போது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து காதை எப்படி சுலபமாக சுத்தம் செய்வது என்று தெரிந்து கொள்வோம்…

பாதாம் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய்
காதுகளில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்ய வேண்டுமென்றால், 2 துளிகள் பாதாம் எண்ணெயை காதிற்குள் விட வேண்டும். எண்ணெய் விட்டவுடன் தலையை ஒரு 5 நிமிடத்திற்கு சாய்த்தபடியே வைத்திருக்கவும். பின்னர் காதை பட்ஸ் உபயோகித்து சுத்தம் செய்திடவும். இப்படி செய்தால் காதிற்குள் சேர்ந்திருக்கும் நாள்பட்ட அழுக்குகளும் சுலபமாக வந்துவிடும். பாதாம் எண்ணெய் இல்லையென்றால், இதே முறையில் கடுகு எண்ணெயை கூட உபயோகிக்கலாம்.

பேக்கிங் சோடா
வாரத்திற்கு ஒரு முறையாவது காதை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அதற்கு அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். அந்த கலவையில் 5 முதல் 10 சொட்டுக்களை காதில் விடவும். ஒரு மணி நேரத்திற்கு தலையை சற்று சாய்த்தபடியே வைத்துக் கொள்ளவும். பின்னர், ஒரு காட்டன் துணியால் காதை நன்கு சுத்தம் செய்திடவும்.

பேபி ஆயில்
காதிலிருக்கும் அழுக்கை வெளியேற்ற வேண்டுமென்றால், ஒரு ஃபில்லரில் பேபி ஆயிலை எடுத்துக் கொள்ளவும். அதில், 3 முதல் 4 துளிகளை காதில் விட்டு, பஞ்சை கொண்டு காதை அடைத்திடவும். 5 நிமிடங்கள் கழித்து பஞ்சை எடுத்திடவும். இப்படி செய்ய காதிலிருக்கும் அழுக்கு நீங்கிவிடும்.

குறிப்பு
பெரும்பாலானோர் பல நாட்களுக்கு காதுகளை சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். இப்படி செய்வதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். காதில் சேரும் அதிகப்படியான அழுக்கு, உறைந்த அழுக்காக மாறி, காது வலி, காது கேளாமை அல்லது இரைச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். அந்த மாதிரியான தருணங்களில் உடனடியாக காதுகளை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹15,010
தங்கம் (24k)
1 கிராம்
₹15,761
வெள்ளி
1 கிராம்
₹265
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க