Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

சனிபகவானுக்கு கடுகு எண்ணெயில் ஏன் அபிஷேகம் செய்கிறார்கள் தெரியுமா?

A
Admin User
Journalist
February 22, 2022 5 min read 46 views
சனிபகவானுக்கு கடுகு எண்ணெயில் ஏன் அபிஷேகம் செய்கிறார்கள் தெரியுமா?

நமது முற்பிறவிகளின் பயனுக்கான கடவுள் என்றழைக்கப்படுபவர் தான் சனி பகவான். எவர் ஒருவருக்கு சனி திசை நடக்கிறதோ அவர்களது வாழ்வில் குறிப்பிட்ட காலத்தில் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க நேரிடும். அவை யாவும் அவர்களின் முற்பிறவிக்கான பயன் என்று கூறப்படுகிறது. எனவே, தான் சனிபகவானுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை அன்று கோயில்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகின்றன. அன்றைய தினம் சனிபகவானுக்கு எள் விளக்கு, கடுகு எண்ணெய் அபிஷேகம், கருப்பு நிற வஸ்திரம், ஊதா நிற மலர் மாலைகள் போன்றவற்றை சனி பகவானுக்கு பக்தர்கள் சமர்பிக்கின்றனர். அந்தவகையில், சனி பகவானுக்கு கடுகு எண்ணெயில் அபிஷேகம் செய்வதற்கான காரணத்தைப் பற்றி தான் இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

சனி பகவானின் சிறப்புகள்

ஜோதிடத்தில், சனி பகவான் செல்வாக்கு மிக்க கிரகமாக கருதப்படுகிறார். சனியை நீதிபதி என்றும் அழைப்பதுண்டு. சனி பகவான் கலியுகத்தின் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். அப்படிப்பட்ட சனி பகவானின் பார்வையில் இருந்து யாராலும் தப்ப முடியாது என்று நம்பப்படுகிறது. மனிதர்கள் மட்டுமல்ல, தெய்வங்களும் கூட சனி பகவானைக் கண்டு பயப்படுவதுண்டு. அதற்கான கதைகள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அப்படிப்பட்ட சனிபகவானை மனம் குளிர செய்ய, சனிக்கிழமையன்று கடுகு எண்ணெயால் அபிஷேயம் செய்வது நல்லது. அதன் கதை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

இலங்கைையை எரித்த அனுமான்

புராண கதைகளின் படி, ராவணனின் தலைக்கணத்தால் தன்னை விட பெரியவர்கள் கிடையாது என்பதற்காக தனது சக்தியால் அனைத்து கிரகங்களையும் சிறைப்பிடித்தார். ராவணனின் கோபம் சனி பகவானையும் விட்டு வைக்கவில்லை. எனவே, சனி பகவானையும் பிணைக் கைதியாக பிடித்து வைத்தார். அதே நேரத்தில், அனுமன் ராமரின் தூதராக இலங்கைக்கு சென்றிருந்தார். அனுமனைக் கண்ட கோபத்தில் ராவணன் அனுமனின் வாலில் தீ வைக்க உத்தரவிட்டான். பதிலுக்கு, அனுமான் மொத்த இலங்கையையும் தீக்கிரையாக்கினார். ராவணன் இலங்கை முழுவதும் தீப் பற்றி எரிய தொடங்கியவுடன், சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து கிரகங்களும் விடுதலையாகின. ஆனால், ராவணன் சனி பகவானை தலைகீழாகத் தொங்கவிட்டதால், சனி பகவான் உடலில் கடுமையான வலி ஏற்பட்டு புலம்ப தொடங்கினார்.

சனி பகவானை காப்பாற்றிய அனுமான்

அத்தகைய சூழலில் அனுமானின் பார்வை சனி பகவான் மீது விழுந்தது. அப்போது, அனுமான் சனி பகவானின் வலியைக் குறைக்க கடுகு எண்ணெயைக் கொண்டு அவரது உடல் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்து விட்டார். இது சனி பகவானுக்கு வலியைக் குறைத்து பெரும் நிம்மதியை அளித்துள்ளது. அந்த நேரத்தில், சனி பகவான் அனுமானுக்கு ஒரு வாக்குறுதி அளித்தாராம். அதன்படி, அனுமான் மீது பக்தி கொண்ட எவர் ஒருவர், தன் மீது கடுகு எண்ணெயால் அபிஷேகம் செய்கிறாரோ, அவர் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுதலை பெறுவார் என்று வாக்குறுதி அளித்தால். அன்றிலிருந்து சனிபகவானுக்கு கடுகு எண்ணெய் சமர்ப்பிப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=dPVV8HpFMoc
Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க