Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

10 நிமிடத்தில் செய்திடலாம் பஞ்சாபி தட்கா மேகி!!!

A
Admin User
Journalist
May 04, 2022 4 min read 64 views
10 நிமிடத்தில் செய்திடலாம் பஞ்சாபி தட்கா மேகி!!!

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் 10 நிமிடத்தில் தயாராக கூடிய மேகியை மிகவும் பிடித்திருக்கிறது. பெரியவர் முதல் சிறியவர் வரை அதன் சுவைக்கு அடிமையாகி உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்களும் மேகியை விரும்பி உண்பவராக இருந்தால், அதை சற்று வித்தியாசமாக செய்து சுவைத்து பாருங்களேன். அதற்கு ஏற்ற ரெசிபி தான் பஞ்சாபி தட்கா மேகி. மாலை வேளையில் குழந்தைகளுக்கோ அல்லது உங்களுக்காகவே கூட செய்து சாப்பிடலாம். இது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலையெல்லாம் கிடையாது. மிகவும் சுலபம் தான். சரி, பஞ்சாபி தட்கா மேகி எப்படி செய்வதென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்

  • மேகி - 2 பாக்கெட்டுகள்
  • வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
  • தக்காளி - 1/4 கப் (நறுக்கியது)
  • குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது)
  • பச்சை பட்டாணி - 1/4 கப்
  • கேரட் - 1/4 கப் (நறுக்கியது)
  • கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் - 1 டீஸ்பூன்
  • வெண்ணெய் - 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 2-3
  • பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • தண்ணீர் - 2 கப்

செய்முறை

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் நன்கு சூடானதும், அதில் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கேரட் மற்றும் பட்டாணிகளைச் சேர்க்கவும்.
  • அவை அனைத்தையும் சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும்.
  • அதன் பிறகு, மேகி மசாலா, கரம் மசாலா மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
  • இப்போது இந்த மசாலாகளின் பச்சை வாசனை போகும் வரை வதக்கியதும், அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • பின்னர், அதில் மேகி நூடுல்ஸை சேர்த்து சிறிது நேரம் கடாயை மூடி வைத்து வேக வைக்கவும்.
  • மேகி வேகும் நேரத்திற்குள் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் போட்டு சூடேற்றவும்.
  • அதில் பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்ததும், ​​அதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, அனைத்தையும் நன்கு கலந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
  • இப்போது மேகி நன்றாக வெந்திருக்கும். அதை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் தயார் செய்து வைத்திருக்கும் வெண்ணெய், மிளகாய் தூள் கலவையைச் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்துவிட்டு சூடாக பரிமாறவும்.
Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க