Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

குளுகுளு முலாம்பழ மில்க் ஷேக்!!!

A
Admin User
Journalist
May 03, 2022 3 min read 49 views
குளுகுளு முலாம்பழ மில்க் ஷேக்!!!

கோடைகாலம் வந்தாலே, கொளுத்தும் வெயிலில் இருப்பத எப்படியெல்லாம் தப்பிப்பது என்று அனைவருமே திட்டமிடுவது இயல்பு. அதிலும், இந்த வரும் மார்ச் மாதம் முதலே வெயில் தனது ருத்ரதாண்டவத்தைத் தொடங்கி விட்டது. மே மாதமும் வந்து விட்டது, சில நாட்களில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி விடும். எனவே, இந்த வெயிலின் ருத்ர தாண்டவத்தில் இருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்ற குளிர்ச்சியான பானங்கள், காரம் குறைவான சமையல் என உடல் சூட்டை குறைக்கும் முயற்சி ஒன்று தான் சிறந்தது. அந்த வகையில், கோடைகால பழமான முலாம்பழத்தை கொண்டு ஒரு அற்புதமான மில்க் ஷேக் செய்து கொடுத்து வீட்டில் உள்ளசர்களை அசத்துங்கள். இதை செய்வதும் மிகவும் சுலபம் தான். சரி வாருங்கள், இப்போது முலாம்பழம் மில்க் ஷேக் எப்படி செய்வதென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்

  • முலாம்பழம் - 1
  • சர்க்கரை - 2 டீஸ்பூன்
  • பால் - 1 கப்
  • ஐஸ் கட்டி - தேவையான அளவு
  • மிக்ஸட் நட்ஸ் - துருவியது

செய்முறை

  • முதலில் முலாம்பழத்தை நன்கு கழுவி தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • இப்போது நறுக்கிய முலாம்பழ துண்டுகள், சர்க்கரைஇ பால், ஐஸ் கட்டி அனைத்தையும் மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • அரைத்த பழத்தை ஒரு கிளாஸில் ஊற்றி, அதன் மேல் நறுக்கிய நட்ஸ் தூவி பரிமாறலாம்.
  • சுவையான குளுகுளு முலாம்பழம் மில்க் ஷேக் தயார். நீங்கள் இதை உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு கொடுக்கலாம் அல்லது நீங்களே குடிக்கலாம். இதைக் குடித்தால் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க