சமையல்

பொங்கல் 2023: வித்தியாசமான கரும்புச்சாறு பொங்கல்!!!

A
Admin User
1 min read
பொங்கல் 2023: வித்தியாசமான கரும்புச்சாறு பொங்கல்!!!
Advertisement
Editor's Choice
Affiliate link

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

Pongal 2023: Sugarcane Pongal - பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. பொங்கல் என்றாலே, தித்திக்கும் பொங்கலும், கரும்பும் தான் அனைவரது நினைவிற்கும் வரும். எப்போதும் போல ஒரு மாதிரியான பொங்கல் செய்கிறீர்கள் என்றால், இந்த முறை சற்று வித்தியாசமான முறையில் பொங்கல் செய்து பாருங்கள். இதுவும் குக்கரில் செய்யக்கூடிய மாடர்ன் பொங்கல் தான். இந்த பொங்கலுக்கு கரும்புச்சாறு பொங்கல் செய்து பாருங்கள். செய்வது மிகவும் எளியது, ஆனால் சுவை அட்டகாசமானது. சரி, கரும்புச்சாறு பொங்கல் செய்ய தேவையான பொருட்கள், செய்முறை எல்லாம் இப்போது பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி - 1 கப்
  • பாசிப்பருப்பு - 1/4 கப்
  • கரும்புச்சாறு - 3 கப்
  • கற்கண்டு - 1/4 கப்
  • நெய் - 4 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி - ஒரு கையளவு
  • ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

செய்முறை

  • முதலில் கரும்பை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து, அதன் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு அரிசியை நன்கு கழுவி தனியாக எடுத்து வைக்கவும்.
  • இப்போது குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  • பின்னர், அதில் கழுவி வைத்துள்ள அரிசி, கரும்பு சாறு சேர்ந்து கலந்து, குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து 4 விசில் விட்டு இறக்கவும்.
  • விசில் முழுவதும் போனதும் குக்கரைத் திறந்து, அத்துடன் கற்கண்டை சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கரைய விடவும்.
  • கற்கண்டு முழுவதுமாக கரைந்ததும், கரண்டியால் பொங்கலை நன்கு மசித்து விடவும்.
  • அத்துடன, ஏலக்காய் பொடியைத் தூவி கிளற விடவும்.
  • இப்போது, மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, குக்கரில் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கரும்புச்சாறு பொங்கல் தயார்.

Image Courtesy: sharmispassions

திணை கருப்பட்டி பொங்கல்!!!

ஐயங்கார் ஸ்டைல் சர்க்கரை பொங்கல்!!!

திணை வெண்பொங்கல்!!!

Advertisement

Read Next