ஆன்மீகம்

சனி - செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் இரட்டை யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு தான் பிரச்சனை...

A
Admin User
1 min read
சனி - செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் இரட்டை யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு தான் பிரச்சனை...
Advertisement
Editor's Choice
Affiliate link

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய் மற்றும் சனி இடையே பகை உணர்வு உள்ளதாக கூறப்படுகிறது. அத்தகைய செவ்வாய் மற்றும் சனி கிரகங்கள் ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை ஒரே ராசியில் சேர்ந்து தங்கியிருக்க போகிறார்கள். ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் 29ம் தேதி காலை 09.57 மணிக்கு சனி பகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். செவ்வாய் பகவான் ஏற்கனவே இந்த ராசியில் தான் அமர்ந்திருக்கிறார். இப்படி கும்ப ராசியில் செவ்வாயும் சனியும் இணைவதால் இரட்டை யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் அசுபமாகவே கருதப்படுகிறது. இந்த சேர்க்கையின் பலன் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு அதிகமாகவே இருக்கக்கூடும். இதனால் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்க நேரிடும். அதிலும், இந்த யோகம் மே 17ம் தேதி வரை தொடரும் என்பதால் இந்த 3 ராசிக்காரர்களும் அந்த காலக்கட்டம் வரை சற்று கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம். சரி இப்போது அந்த 3 ராசிக்காரர்கள் யார் மற்றும் இந்த மோசமான யோகத்தில் இருந்து தப்பிப்பதற்கான பரிகாரம் என்ன என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்வோம்…

கடகம்

கடக ராசிக்கு எட்டாம் வீட்டில் சனி - செவ்வாய் சேர்க்கை உருவாகியுள்ளது. எட்டாவது வீடானது, வயது, ஆபத்து மற்றும் விபத்து ஆகியவற்றிற்கான வீடாக கருதப்படுகிறது. எனவே, இந்த ராசிக்காரர்களுக்கு மே 17 வரையிலான காலக்கட்டத்தில் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, அவர்கள் அலுவலகத்தில் எந்த வகையான ஆபத்தான முடிவு எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இந்த இரட்டை யோகம் உங்களுக்கு ஒருவித விபத்தை குறிக்கிறது. எனவே, எந்தவொரு விஷயத்திலும் சற்று கூடுதல் கவனத்துடன் செயல்பட கடக ராசிக்காரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கன்னி

சனி – செவ்வாய் சேர்க்கை கன்னி ராசிக்கு 6 ஆம் வீட்டில் அமைந்துள்ளது. இந்த வீடு கடன், எதிரிகள், ஆரோக்கியம் மற்றும் கடின உழைப்பிற்கான வீடு. எனவே, இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, உண்ணும் உணவில் கவனத்தை செலுத்தவும். சிறு அலட்சியமும் உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை மட்டும் மறவாதீர்கள். இந்த காலக்கட்டத்தில், உங்களுக்கு வருமானத்திற்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். கையில் இருந்து சேமிப்பு முழுவதும் கரைய வாய்ப்புள்ளது. எதற்கும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவெடுத்தால் நல்லது.

கும்பம்

உங்கள் ராசியில் சனி - செவ்வாய் இருவரும் இணைந்திருக்கிறால்கள். எனவே, கும்பம் ராசிக்காரர்கள் இந்த சனி-செவ்வாய் சேர்க்கையால் நிறைய சிரமங்களைச் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கும்ப ராசிக்காரர்களுக்கு வீண் கோபம், தேவையற்ற எரிச்சல் உணர்வால் நிறைய பாதிப்புகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணை மற்றும் சக ஊழியருடன் தகராறு ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. எனவே, உங்கள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தால் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

சனி-செவ்வாய் சேர்க்கைக்கான பரிகாரங்கள்

  • செவ்வாய் மற்றும் சனியின் சேர்க்கையால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்கிழமை அன்று அனுமன் வழிபாட்டை மேற்கொள்வது நல்ல பலனளிக்கும்.
  • சனி மற்றும் செவ்வாயின் சாந்திக்காக அவர்களுக்கான மந்திரங்களை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.
  • இந்த சேர்க்கையால் பாதிக்கப்பட்டவர்கள் சனி மற்றும் செவ்வாய் பகவானுக்கு உகந்த பொருட்களை பிறருக்கு தானம் செய்ய பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
Advertisement

Read Next