Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

அதிர்ஷ்டம் உங்களை விட்டு போகாமல் இருக்க 2022ல் இருந்து இதை செய்யுங்க...

A
Admin User
Journalist
December 21, 2021 7 min read 57 views
அதிர்ஷ்டம் உங்களை விட்டு போகாமல் இருக்க 2022ல் இருந்து இதை செய்யுங்க...

நம்மால் நமது விதியை மாற்ற முடியாது. நமக்கு நடந்த விஷயத்தையும் மாற்ற முடியாது. இயற்கையின் நிகழ்வுகளில் இருந்து ஒரு போதும் தப்ப முடியாது. ஒருவருக்கும் அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் எந்த நாளிலும் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். பெரும்பாலானோர், அதிர்ஷ்டம் வராவிட்டாலும், துரதிர்ஷ்டம் மட்டும் வரவே கூடாது என்று நினைப்பது துண்டு. துரதிர்ஷ்டம் ஏற்படுவதற்கு ஒருவர் செய்த தவறுகள் கூட காரணமாக இருக்கலாம். எனவே, வரவிருக்கும் புத்தாண்டு 2022ல் ஆவது எதிர்மறை ஆற்றல்கள் விலகி, அதிர்ஷ்டம் உங்கள வசமாக வேண்டுமென்றால் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்தாலே போதும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை செய்வதன் மூலம், உங்கள் உடல்நலம், பணம், தொழில், வேலை, வணிகம், திருமண வாழ்க்கை, காதல் மற்றும் கல்வி போன்ற அனைத்தும் மேம்படுத்தும்.

உப்பு


உப்பின் சக்தியை நாம் அனைவரும் அறிவோம். இது உங்கள் உணவிற்கு சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், அதை சரியான இடத்தில் வைக்காத போது வீட்டில் சண்டைகளும் உருவாகும். எனவே, 2022 இல் துரதிர்ஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கான முதல் உப்பை இப்படி பயன்படுத்துங்க. அதற்கு வீடை துடைக்கும் போது ஒரு வாளி தண்ணீரில் சிறிது உப்பை சேர்த்து கலந்து துடைத்தால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் உடனடியாக வெளியேறும். மற்றொரு வழி, ஒரு கிண்ணத்தில் உப்பை வைப்பது. வீடு அல்லது அலுவலகத்தில் ஆங்காங்கே சிறு சிறு கிண்ணத்தில் உப்பை வைப்பதன் மூலம் அனைத்து வாஸ்து தோஷங்களும் நீங்கும்.

உடைந்த கண்ணாடியை தூக்கி எறியுங்கள்


வாஸ்து அடிப்படையில், கண்ணாடி உங்கள் உடல் தோற்றம் மற்றும் உங்கள் செயல்கள், எண்ணங்கள், கனவுகள் போன்றவற்றை பிரதிபலிக்கும் திறனைக் கொண்டுள்ளது. அது உடைந்தால், உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்கள் அனைத்தும் உடைந்துவிடும் என்று நம்பப்படுகிறது. எனவே, வீட்டில் கண்ணாடி உடைந்தால் அது அபசகுணமாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டில் உடைந்த கண்ணாடி இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்திடுங்கள். இதனால், துரதிர்ஷ்டம் உங்களை விட்டு விலகி, உங்கள் குடும்பத்திற்கு செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரும்.

ஊதுபத்திகள் அல்லது நறுமணமிக்க மெழுகுவர்த்திகள் ஏற்றுவது


வீட்டில் ஊதுபத்திகளை ஏற்றி வைப்பது அனைவரது வீடுகளிலும் வழக்கமான ஒன்று. இந்துக்கள் மட்டுமின்றி, பிற மதத்தினரும் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும், 2022 ஆம் ஆண்டில், வீட்டில் ஊதுபத்திகள் அல்லது வாசனை மெழுகுவர்த்தி ஏற்றுவது பல நன்மைகளைத் தரக்கூடியது. மேலும், 2022 இல் துரதிர்ஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கான எளிதான வழிகளின் பட்டியலில் இதுவும் இடம்பிடிக்கிறது. மேலும், இது வீட்டில் எதிர்மறை ஆற்றலையும் விரட்டி, உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும். இது நிச்சயமாக உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.

கற்பூரம் ஏற்றுவது


பொதுவாக கோவில்களிலும் வீட்டிலும் பூஜை செய்யும் போது கற்பூரம் பயன்படுத்தப்படும். கற்பூரம் ஏற்றுவது, எதிர்மறை ஆற்றல்களிலிருந்து விடுபடவும், பின் அதிர்ஷ்டத்தை பெறவும் உதவக்கூடியது. 2022ல் புதிய வீடு வாங்க விரும்புபவர்கள், மற்றொரு இடத்திற்கு மாற விரும்புபவர்கள் கற்பூரத்தை வீட்டிலோ அல்லது தங்களது அறையிலோ வைப்பதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்கி நினைத்தது கைக்கூடும்.

பூக்களைப் பயன்படுத்துங்கள்


மனிதர்களுக்கு கடவுள் வழங்கிய பரிசுகளில் பூக்கள் மிகவும் அற்புமானவை. எனவே, வீட்டில் பூக்களை வைத்திருப்பதன் மூலமோ அல்லது ஒருவருக்கு வழங்குவதன் மூலமோ நீங்கள் நிறைய நன்மைகளைப் பெறலாம். 2022 ஆம் ஆண்டில் உங்கள் உறவை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், உங்களைச் சுற்றி எப்போதும் பூக்கள் இருக்கும்படி வைத்திருக்க வேண்டும். இதன்மூலம், நீங்கள் மிகுதியாக அதிர்ஷ்டத்தை ஈர்க்க முடியும். உங்களது வீட்டில் முட்களைக் கொண்ட பூச்செடிகளை நடலாம். உதாரணத்திற்கு, வீட்டின் கிழக்குப் பகுதியில் ரோஜா செடிகளை நடுவதன் மூலம் நேர்மறை ஆற்றலைப் பெறுவதோடு, வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை சுலபமாக வெளியேற்றிடலாம். மேலும், உங்களுக்கு சில நீண்டகால ஆசைகள் எதாவது இருந்தால், அவை 2022 இல் நிறைவேற்ற விரும்பினால், நீங்கள் உங்கள் வீட்டில் ரோஜா செடியை நடுங்கள். வெற்றி உங்கள் வசம்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க