Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

மேஷத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் இவர்கள் வாழ்வில் மகத்தான வெற்றி பெறப் போகிறார்கள்...

A
Admin User
Journalist
April 22, 2022 5 min read 53 views
மேஷத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் இவர்கள் வாழ்வில் மகத்தான வெற்றி பெறப் போகிறார்கள்...

ஜோதிடத்தில் ராகு-கேதுவின் ராசி மாற்றம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நிழல் கிரகமான ராகுவின் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பெரிதும் பாதிக்கிறது. ஏப்ரல் 12ம் தேதி ராகுவின் ராசி மாற்றம் நடைபெற்றது. அப்படி ராகு இடம்பெயர்ந்து மேஷ ராசிக்கு சென்ற நேரம் செவ்வாயின் ராசியை ராகு மாற்றியுள்ளார். ராகுவின் இந்த பெயர்ச்சியானது வெளியூர் பயணம், தொற்றுநோய்கள், அரசியல் போன்றவற்றுக்கு காரணியாக கருதப்படுகிறது. எனவே, ராகுவின் ராசி மாற்றத்தின் பலன்கள் ஒருவரது வாழ்வில் பல்வேறு விஷயங்களில் பிரதிபலிக்கும். வேத ஜோதிடத்தின் படி ராகு தீங்கு விளைவிக்கும் கிரகமாக கருதப்படுகிறது. இத்தகைய மோசமான விளைவுகளை உண்டாக்கும் ராகுவும் சில ராசிக்காரர்களுக்கு நல்ல சுப பலன்களை வழங்கக்கூடும். மேஷ ராசிக்கு சென்ற ராகு பகவான் ஒன்றரை ஆண்டு இந்த ராசியில் இருக்க போகிறார். எனவே, மேஷத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் சிறப்பான பலன்களைப் பெற போகும் ராசிகளைப் பற்றி தான் இந்த கட்டுரையில் தெரிந்த கொள்ள போகிறோம்…

மேஷம்
ராகுவின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்லதாகவே கருதப்படுகிறது. பெயர்ச்சி காலத்தில், நீங்கள் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். ராகு உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இது வருமானம் மற்றும் லாபத்தின் ஸ்தானமாக அழைக்கப்படுகிறது. எனவே, ராகு சஞ்சார காலத்தில் உங்கள் வருமானம் அதிகரித்து நிதி நிலை மேம்படும். வியாபாரிகளுக்கு இந்த காலத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் வெற்றி பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றம் அடையலாம். வியாபாரத்தை முன்னேற்ற ஏதேனும் திட்டமிட்டால் இதை நடைமுறைப்படுத்த இந்த காலம் ஏற்றதாக இருக்கும்.

கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு ராகு மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனது சாதகமாகவே இருக்கும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இது வேலை, பணியிடம் போன்றவற்றிற்கான ஸ்தானமாக கருதப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் வேலை தேடி அலைபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த வெற்றியை இந்த காலத்தில் நிச்சயம் பெறுவார்கள். நீங்கள் புதிதாக தொழில் தொடங்க ஏதேனும் திட்டமிட்டால், இதுவே அதற்கு சிறந்த நேரம். உங்கள் திட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள், வெற்றி உங்கள் வசம். உங்களுக்கு உதவ பலர் முன்வருவர்.

மீனம்
ராகு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது பணம் மற்றும் பேச்சு திறனுக்கான ஸ்தானமாகும். இந்த நேரத்தில் நீங்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறலாம். வியாபாரிகளுக்கு தொழிலில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். ராகு பெயர்ச்சியின் தாக்கத்தால் புதிய திட்டங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி நிலையின் பலம் பெருகும். கண்ணுக்கு தெரியாத ரகசிய எதிரிகள் ஒழிவார்கள். வியாபாரிகளுக்கு முதலீடு செய்வதற்கு இது ஏற்ற காலம். இந்த நேரத்தில் நீங்கள் நிதி ஆதாயங்களின் பலனைப் பெறுவீர்கள். இதனால் உங்கள் வாழ்வில் இருந்துவந்த கடன் தொல்லைகள் முற்றிலுமாக நீங்கும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க