Sunday, May 10, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

மேஷத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு எத்தகைய பலனைத் தர போகிறார் தெரியுமா?

A
Admin User
Journalist
June 27, 2022 10 min read 162 views
மேஷத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு எத்தகைய பலனைத் தர போகிறார் தெரியுமா?

ஜோதிடத்தில் செவ்வாய் பகவானுக்கு என தனி இடம் உண்டு. செவ்வாய் பகவான் அனைத்து கிரகங்களுக்கும் தளபதி என்றும் அழைக்கப்படுகிறார். செவ்வாய் ஆற்றல், சகோதரன், நிலம், வலிமை, தைரியம், வலிமை, வீரம் ஆகியவற்றிற்கான கிரகமாக கருதப்படுகிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகள் செவ்வாய் பகவானால் ஆட்சி செய்யப்படும் ராசிகளாகும். அப்படிப்பட்ட செவ்வாய் பகவான் இப்போது மகர ராசியில் உச்சமாக உள்ளார். அதே நேரத்தில் கடகத்தில் பலவீனமாக உள்ளார். ஜூன் 27ஆம் தேதியான இன்று செவ்வாய் மேஷ ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். சில ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மாற்றத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்றாலும், சிலர் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது. எனவே, மேஷத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் 12 ராசிக்காரர்களுக்கும் எத்தகைய மாற்றம் ஏற்படப்போகிறது என்பதைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

மேஷம்

இந்த நேரத்தில் மேஷ ராச்காரர்களுக்கு தொழிலில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். இருப்பினும், இந்த நேரத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். மேலும், தேவையில்லாத செலவுகளும் அதிகரிக்கும். ஜூன் 27ம் தேதிக்கு பிறகு குழந்தைகளிடம் இருந்து இனிமையான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

அதிகப்படியான கோபத்தை கட்டுப்படுத்த ஜோதிடம் கூறும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்களேன்…

ரிஷபம்

கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருப்போர் இந்த நேரத்தில் கவனமான இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், திடீர் சிரமங்கள் உங்களை சூழ்ந்து கொள்ளலாம். மேலும், ரிஷப ராசி வியாபாரிகளுக்கு தொழில் மேம்படும். நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். மேலும், உங்களுக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்புகளும் உண்டு.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் 27ம் தேதி முதல் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் தாயின் உடல்நிலையில் எச்சரிக்கையாக இருக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் ஒதுக்கப்படலாம். உத்தியோகம் சம்பந்தமாக வெளியூர் செல்லவும் உங்களுக்கு வாய்ப்பு உண்டு. இதனால், குடும்பத்தை விட்டு நீங்கள் விலகி இருக்க வேண்டி வரலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். தொழிலதிபர்களுக்கு வியாபாரத்தில் சிரமங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நீங்கள் வேலை தொடர்பாக வேறு எந்த இடத்திற்கும் செல்லலாம். மேலும், வருமானமும் அதிகரிக்கும்.

ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்க இந்த யோகாசனங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் போதும்…

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டிய நேரமிது. வியாபாரத்தில் உங்களுக்கு அதிக அலைச்சல் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் பங்கேற்கும் நேர்காணலில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு திடீரென வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் வியாபாரம் பெருகும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. இந்த பயணங்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். எழுத்து சம்பந்தப்பட்ட அறிவுசார் வேலைகளில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். இது புதிய வருமான ஆதாரமாகவும் மாறலாம். இந்த நேரத்தில் நீங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் குடும்பத்தில் கோபம் மற்றும் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். இல்லையெனில், வாழ்க்கையே சங்கடமாக மாறலாம். வியாபாரிகள் நண்பரிடமிருந்து வணிகத்திற்கான புதிய சலுகையைப் பெறலாம். அலுவலகத்தில் அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களை இந்த நேரத்தில் திடீர் குடும்ப பிரச்சனைகள் தொந்தரவு செய்யலாம். வியாபாரிகள் வியாபாரத்தில் சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம். ஆனால், நண்பரின் உதவியால் வியாபாரம் மேம்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். புதிய வியாபார முன்மொழிவுகள் வரக்கூடும். யோசித்து முடிவெடுத்தால் நிச்சயம் ஏற்றம் காணலாம்.

வேப்பிலையை இப்டி யூஸ் பண்ணா எப்படிப்பட்ட முகப்பரு பிரச்சனையையும் சரி செஞ்சுடலாம்…

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டு. அலுவலகத்தில் பொறுப்புகளின் சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பழைய நண்பரின் சந்திப்பு சாத்தியமாகும். வியாபாரத்திற்காக தந்தையிடமிருந்து பண உதவியும் பெறலாம். உங்களுக்கு வருமானம் அதிகரிப்பதால், நிதி நிலையும் மேம்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இந்த காலக்கட்டத்தில் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். அதிகரித்து வரும் செலவுகளால் நீங்கள் நிறைய கவலைப்படலாம். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நண்பரின் உதவியால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்துடன் மத வழிபாட்டு தலங்களுக்கும் நீங்கள் பயணம் மேற்கொள்ளலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கல்விப் பணிகளில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். அறிவுசார் நடவடிக்கைகள் உங்களுக்கு புதிய வருமான ஆதாரமாக மாறும். கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகள் தொடர்பான சுற்றுலா செல்லலாம். உங்களது இந்த பயணங்கள் மகிழ்ச்சியான பலனைத் தரக்கூடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு முன்னோர் சொத்துகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நீங்கள் வேறு எந்த இடத்திற்கும் புலம் பெயர்ந்து செல்லலாம். இதனால் பயணச் செலவுகள் அதிகரிக்கலாம். வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகளால் வியாபாரம் பெருகும். திடீர் பணம் வர வாய்ப்பு உண்டு. நிதி நிலையில் ஏற்றம் காணலாம்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,150
தங்கம் (24k)
1 கிராம்
₹14,858
வெள்ளி
1 கிராம்
₹280
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நலமான வாழ்விற்கு எது மிக முக்கியம்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க