Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

இந்த மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் சேர்ந்திருப்பதால் 12 ராசிகளுக்கும் ஏற்படபோகும் விளைவுகள்...

A
Admin User
Journalist
April 09, 2022 8 min read 79 views
இந்த மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் சேர்ந்திருப்பதால் 12 ராசிகளுக்கும் ஏற்படபோகும் விளைவுகள்...

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் சேர்க்கை என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில், தற்போது மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் அமர்ந்திருப்பது பெரும் யோகத்தை கொண்டிருக்கிறது. சுக்கிரன், செவ்வாய் மற்றும் குரு பகவான் ஒரே ராசியில் அதாவது கும்பத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த கிரக சேர்க்கையானது சில ராசிக்காரர்களுக்கு பலன்களை வாரி வழங்கலாம், சிலருக்கு மிகுந்த துன்பங்களை கொடுக்கலாம். எனவே, தற்போதைய இந்த 3 கிரகங்களின் சேர்க்கை 12 ராசிக்காரர்களுக்கும் எத்தகைய பலனைக் கொடுக்கப்போகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்…

மேஷம்
உங்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கலாம். இதனால், வியாபாரிகளுக்கு தொழில் மேம்படும். ஆனால், நாவடக்கம் தேவை. பிறருடன் பேசும் போது மிகவும் கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டிய மிக அவசியம். இந்த நேரத்தில் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ரிஷபம்
இந்த கிரக சேர்க்கை காலத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு மனதில் அமைதியற்ற தன்மை இருக்கும். அதுதவிர, தேவையற்ற கோபத்தால் சம்பந்தமில்லாத சர்ச்சைகளிலும் சிக்க கொள்ள நேரிடும். எனவே, வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அகாரிகளுடன் இணக்கமான இருக்கவும். வியாபாரிகளுக்கு தொழில் முன்னேற்றமும், வருமானமும் அதிகரிக்கும்.

மிதுனம்
இந்த காலக்கட்டத்தில் உங்கள் மன அமைதி மேலோங்கும். கல்வி அல்லது அறிவுசார் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வாய்ப்புகளைத் தேடி தேடி பயன்படுத்தி கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் வேலை சுமை அதிகமாக இருக்கும். உங்கள் அன்றாட நடைமுறைகளில் சில குழப்பங்கள் இருக்கலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த காலக்கட்டத்தில் மிகவும் நிதானமாக இருங்கள். குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது. உங்களில் கல்வி சார்ந்த பணிகளில் சில குறுக்கீடுகள் ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். அலட்சியத்தில் உடல்நலத்தைப் புறக்கணிக்கும் தவறை மட்டும் செய்யாதீர்கள்.

சிம்மம்
இந்த கிரகங்களின் சேர்க்கையால் உங்கள் தன்மையில் சிறிது மாற்றம் உண்டாகும். எனவே, நீங்கள் நிதானமாக இருப்பதோடு, அதிகப்படியான கோபத்தையும் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான செலவுகள் ஏற்படக்கூடும். உங்கள் ஆரோக்கியத்தையும், உங்கள் குடும்பத்தாரின் ஆரோக்கியத்தையும் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.

கன்னி
நிதானமாக இருங்கள் அமைதிக்காக பாடுபட வேண்டிய நேரமிது. அதுதவிர, கன்னி ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். வியாபாரிகள், தங்களது தொழிலை விரிவுபடுத்த உங்கள் தந்தையிடம் உதவி கோரியிருந்தால், இந்த நேரம் உங்கள் தக்க பண உதவி கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கையால் மனதில் அமைதி நிலவும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரிகளின் கடின உழைப்பால், தொழில் நிலை மேம்படும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதோடு, புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். நண்பர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலக்கட்டத்தில் இத்தனை நாளாக இல்லாமல் திடீரென படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். படிப்பு, தேர்வு ஆகிறவற்றில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். நண்பரின் ஆதரவால் பெரும் ஆதாயத்தை அடையலாம். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு
இந்த காலக்கட்டத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு மனதில் ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்படும். எனவே, நீங்கள் நிதானமாக இருப்பதோடு, பிறருடன் பேசும் போது பொறுமையாக இருக்க வேண்டிய அவசியம். உங்கள் நிதி நிலையை மேம்படுத்த முயற்சித்து வந்தால், உங்கள் நண்பரின் ஆதரவால் அது சாத்தியமாகும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் மனகுழப்பத்துடனுமம், அதிருப்தியுடனும் இருக்க வேண்டிய சூழல் உருவாகலாம். இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, குடும்பத்துடன் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம். மேலும், இந்த காலக்கட்டத்தில் பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திடீர் உடல்நலக் குறைவுகளால் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.

கும்பம்

3 கிரகங்களும் உங்கள் ராசியில் சேர்ந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில் உங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் சந்தோஷம் மேலோங்கும். திடீரென நண்பர்களின் சந்திப்பு நடக்கலாம். வியாபாரிகளுக்கு நிதி நிலையில் சிறிது தடுமாற்றம் உண்டாகலாம்.வியாபாரத்தில் வருமானம் குறையலாம். இருப்பினும், மனம் தளராது போராடினால் நிச்சயம் வெற்றி கிட்டும்.

மீனம்
இந்த கிரக சேர்க்கையானது உங்கள் இயல்பில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும். எனவே, தேவையற்ற கோபம், சண்டை சச்சரவுகளை முடிந்தவரை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வியாபாரிகள், தடைப்பட்ட பண வரவைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. சக ஊழியர்களிடம் சற்று கவனமாக இருக்க முயலுங்கள்.


Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க