ஆன்மீகம்

கரூரில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் கல்யாண பசுபதீஸ்வரர்...

A
Admin User
1 min read
கரூரில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் கல்யாண பசுபதீஸ்வரர்...
Advertisement
Editor's Choice
Affiliate link

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

தினமொரு கோயில்ல இன்னைக்கு நம்ம பார்க்க போறது கரூர்ல இருக்குற அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில். பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்திய திருத்தலம் இது.

கொங்குநாட்டு சிவஸ்தலங்களிலேயே கரூரில் இருக்குற சிவாலயம் தான் ரொம்ப பெரிசு… மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று சிறப்புக்களை உள்ளடக்கியது கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில். இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 2.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் ராஜகோபுரம் ஏழு நிலைகளையும் ஏழு கலசங்களையும் கொண்டுள்ளது கோயிலுக்கு உள்ள புகழ்சோழர் மண்டபம் இருக்கு. இவர் 63 நாயன்மார்கள்ல ஒருவர். அதுமட்டுமில்லாம 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் பிறந்த தலம் என்ற பெருமையும் கருவூருக்கு உண்டு.

கிழக்கு நோக்கி உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் சுயம்பு லிங்கமா இங்க அருள்பாலிக்கிறார். இவர் பசுபதிநாதர், ஆநிலையப்பர் அப்படினும் அழைக்கப்படுரார். ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்றால் சுந்தரவல்லி தாயார் தெற்கு நோக்கியும், அவருக்கு இடது புறம் கிழக்கு நோக்கி அலங்காரவல்லி தாயாரையும் தரிசிக்கலாம்.

பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி உள்ளது.

ஆனிலையப்பரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.

இத்தலத்து ஈசனை வணங்குவோருக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

இந்த தலத்துல அபிஷேகம், மற்றும் தாலி, ஆபரணங்கள் ஆகியவற்றை காணிக்கையாக பக்தர்கள் செலுத்துகிறார்கள். சுவாமிக்கு பால், தயிர், இளநீர், எண்ணெய் அபிஷேகம் செய்யலாம். மேலும் சுவாமிக்கு வேஷ்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம்.

https://www.youtube.com/watch?v=MqKmH9GvyBo
Advertisement

Read Next