ஆரோக்கியம்

கால் மேல கால் போட்டு உட்காரும் பழக்கம் உங்களுக்கு இருக்கா ? அப்ப இந்த பிரச்சனைலாம் வரலாம் பார்த்துகோங்க...

A
Admin User
1 min read
கால் மேல கால் போட்டு உட்காரும் பழக்கம் உங்களுக்கு இருக்கா ? அப்ப இந்த பிரச்சனைலாம் வரலாம் பார்த்துகோங்க...
Advertisement
Editor's Choice
Affiliate link

FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

இன்றைய காலக்கட்டத்தில், கால் மேல் கால் போட்டு உட்காரும் பழக்கம் அநேகருக்கு உண்டு. இருப்பினும், இந்த பழக்கம் மிகவும் மோசமானது என்று கூறப்படுகிறது. பொது இடங்களில் அல்லது வீட்டிலேயே கூட சொகுசாக உட்கார பலரும் இவ்வாறு உட்காருவதையே விரும்புகின்றனர். இப்படி உட்காருவதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைப் பற்றி தான் இந்த கட்டுரையில் சொல்ல போகிறேன். இதை படித்த தெரிந்த பிறகு நீங்களே இந்த பழக்கத்தை இன்றுடன் விட்டு விட முடிவு செய்து விடுவீர்கள். சரி, இப்போது கால் மேல் கால் போட்டு உட்காருவதால் என்னென்ன பிரச்சனைகள் வரும், என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்…

காலில் இரத்த ஓட்டம் தடைபடும்
ஒரு காலை மற்றொரு கால் மீது வைத்து நீண்ட நேரம் உட்காரும் போது பாதம் மரத்துப் போக தொடங்கும். ஏனெனில், இப்படி உட்காரும் போது உட்காரும் போது முழங்காலுக்குப் பின்னால் உள்ள நரம்பின் மீது அழுத்தம் அதிகரித்து, கீழ் முதுகில் இரத்த ஓட்டம் தடைபடும். அப்படி இருக்கையில், இதே போன்று எப்போதும் உட்கார பழக்கமாகி விட்டால், காலில் கடுமையான பிரச்சனை ஏற்படலாம். இதில், உங்கள் பாதத்தின் முன் பகுதியையும் கட்டை விரலையும் தூக்க முடியாமலும் போகக்கூடும்.

இரத்த அழுத்தம் அதிகரிக்கும்
ஓர் ஆராய்ச்சியின் படி, கால் மேல் கால் போட்டு உட்காருவதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ஏற்கனவே, இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த நிலை மிகவும் பொதுவானது. உங்களுக்கு சாதாரணமாகவே இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் இப்படி உட்காருவதைத் தவிர்ப்பது நல்லது.

இதய நோய்க்கு வழிவகுக்கும்
கால் மேல் கால் போட்டு உட்காருவது கால்களில் பிரச்சனைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, இதய நோய்க்கும் வழிவகுக்கும். இவ்வாறு உட்காரும்போது, காலுக்கான ​​இரத்த ஓட்டம் நின்று விடும். இதன் காரணமாக, கால்களுக்குச் செல்லும் இரத்தம் மீண்டும் இதயத்திற்குத் திரும்பத் தொடங்குகிறது. இதன் காரணமாக, இதயத்தின் அழுத்தம் அதிகரிக்கிறது. இது தவிர, பாத நரம்புகளும் பலவீனமடையத் தொடங்கும். நரம்புகளின் சேதம் அல்லது பலவீனம் காரணமாக, இரத்தம் ஒரே இடத்தில் உறையவும் தொடங்கும்.

இடுப்பு எலும்பைப் பாதிக்கும்
கால் மேல் கால் போட்டு உட்காருவது இடுப்புப் பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, இடுப்பு எலும்பிலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். இது பலருக்கும் தெரியாது. இடுப்பானது முதுகெலும்பை ஆதரிக்கிறது. எனவே, இடுப்பு எலும்பு பாதிக்கப்படும் போது, ​​​​கழுத்து மற்றும் பின்புறத்தின் கீழ் மற்றும் நடுத்தர முதுகு பகுதியிலும் வலி உண்டாகிறது.

நடப்பதிலும் சிக்கல்
கால் மீது கால் போட்டு உட்காரும் பழக்கம் உள்ளவர்கள் நன்கு கவனித்து பார்த்தால், இந்த பழக்கத்திற்கு பிறகு உங்கள் நடையில் சில மாற்றத்தை காணலாம். சிலருக்கு நடப்பதிலேயே பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, நீண்ட நேரத்திற்கு இப்படி உட்காருவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement

Read Next