ஆரோக்கியம்

கோடையில் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?

A
Admin User
1 min read
கோடையில் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?
Advertisement
Editor's Choice
Affiliate link

Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

கோடைகாலத்தில், பலரும் மூசாம்பி ஜூஸ் எனும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால், பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். சிட்ரஸ் பழங்கள் என்றவுடனே எல்லோருக்கும் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுக்குப் பிறகு சாத்துக்குடி தான் நினைவிற்கு வரும். இந்த சாத்துக்குடி பழத்தின் சுவையானது புளிப்பு-இனிப்பு கலந்ததாக இருப்பதே அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவதற்கு முக்கிய காரணம். மேலும், இது பல்வேறு ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக திகழ்கிறது. உண்மையில், இதில் நிறைய வைட்டமின் சி உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. அதே நேரத்தில், இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டி டயபெடிக் பண்புகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளன. அதுதவிர, கார்போஹைட்ரேட், கால்சியம், வைட்டமின் பி6, தயாமின், இரும்பு, நார்ச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், தாமிரம், ஃபோலேட் போன்றவையும் சாத்துக்குடியில் உள்ளன. சரி, இப்போது கோடைகாலத்தில் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்க போகிறது என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்வோம்…

பசியை அதிகரிக்க செய்யும்

சாத்துக்குடி பழத்தை சாப்பிடுவது அல்லது சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது பசியின்மை பிரச்சனையை முற்றிலுமாக நீக்குகிறது. எனவே, பசியின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சாத்துக்குடி ஜூஸ் குடிக்க வேண்டும். அதிகப்படியான உடல் எடை குறைவால் ஏற்படக்கூடிய அனோரெக்ஸியா பிரச்சனையை போக்க தொடர்ந்து சாத்துக்குடி ஜூஸ் குடிக்க வேண்டும். இதன்மூலம், உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து உணவின் சுவையை நன்கு ருசித்து உண்ண உதவிடும். அதனால், ஒருவர் விரும்பி உணவு உண்ண தொடங்கிடுவர்.

குமட்டல், வாந்தியைத் தடுக்கும்

கர்ப்பம், அஜீரணம், ஹார்மோன் சமநிலையின்மை, முக்கிய உறுப்புகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவை, வாந்தி அல்லது குமட்டல் பிரச்சனைக்கு வழிவகுக்கும். அத்தகைய சூழ்நிலையில், சாத்துக்குடி பழமோ அல்லது ஜூஸோ குடிப்பதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஸ்கர்வி நோயிலிருந்து நிவாரணம்

உடலில் வைட்டமின் சி குறைப்பாட்டால் ஸ்கர்வி நோய் ஏற்படுகிறது. மேலும் இந்த நோயால் அதிக உடற்சோர்வு, ஈறுகளில் ரத்தம் கசிதல், முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளைக் காணலாம். சாத்துக்குடியில் உள்ள வைட்டமின் சி இந்த நோயைக் குணப்படுத்த உதவுகிறது.

மஞ்சள் காமாலை

இரத்தத்தில் பிலிரூபின் அதிகரிப்பதால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. மேலும் இது ஹெபடைடிஸ், பித்தத்தில் உள்ள கற்கள், கட்டிகள் போன்றவற்றாலும் ஏற்படலாம். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடுமையான உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், எண்ணெய், காரசாரமான உணவுகள் நிலைமையை மேலும் மோசமாக்கும். அதே நேரத்தில், மஞ்சள் காமாலையில் சாத்துக்குடி ஜூஸ் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். இதனால், அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்திட முடியும்.

நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்

வைட்டமின் சி நிறைந்த சாத்துக்குடி ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும், பல நோய்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற பல வகையான பருவகால நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பதில் சாத்துக்குடி முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில், இந்த பழத்தை வாரத்திற்கு மூன்று முறையாவது சாப்பிடுவதன் மூலம், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை சுலபமாக வென்றிடலாம்.

நீரிழப்பைத் தவிர்க்கும்

கோடைகாலத்தில் அதிகப்படியானோர் நீரிழப்பு பிரச்சனைக்கு ஆளாக நேரிடும். கடுமையான வெயிலால் இது பலருக்கும் ஏற்படக்கூடும். போதுமான நீர் குடிக்காமல் இருப்பதும் இதற்கு காரணம். இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க சாத்துக்குடி ஜூஸ் குடியுங்கள். பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பிற தாதுக்கள் நிறைந்த சாத்துக்குடி ஜூஸ் ஒரு கிளாஸ் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.

எலும்புகள் வலுவடையும்

இன்றைய காலகட்டத்தில் பலர் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இவை அனைத்தும் நோயெதிர்ப்பு உயிரணுக்களால் திசுக்களில் ஏற்படும் அழற்சியின் விளைவாகும். அதே நேரத்தில், வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்த சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது எலும்புகளை வலுப்படுத்துகிறது. மேலும், மூட்டுகளின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

Advertisement

Read Next