Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

சூரியனின் அருளால் ஜூலை 16 முதல் இந்த ராசிக்காரர்களை யாராலும் எதிர்க்கவே முடியாது...

A
Admin User
Journalist
July 08, 2022 7 min read 91 views
சூரியனின் அருளால் ஜூலை 16 முதல் இந்த ராசிக்காரர்களை யாராலும் எதிர்க்கவே முடியாது...

ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஏனெனில், கிரகங்களில் நிலைகளைக் கொண்டு தான் ஜாதகம் கணிக்கப்படுகிறது. அந்த வகையில், கிரகங்களுக்கு தலைவனாக விளங்கும் சூரிய பகவான் தனது ராசியை மாற்றி கொள்ள போகிறார். அதுவும், வரும் 16ம் தேதி சூரிய பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சூரியனை பொறுத்தவரை மாதந்தோறும் ராசி மாறக்கூடியவர். சூரிய பகவானின் ராசி மாற்றம் சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது. கடகத்திற்கு பெயர்ச்சியாகும் சூரியனால், இந்த பெயர்ச்சி கர்க சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல தொடக்கமாக அமைய போகிறது என்பதைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு ஜூலை 16ம் தேதி முதல் புதிய வருமான ஆதாரமும், நல்ல லாபமும் கிடைக்கும். இதன் காரணமாக உங்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். வியாபாரிகளுக்கு தங்களது வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதுதவிர, உடன்பிறந்தோரின் உதவி எதிர்பார்க்கும் நேரத்தில் கிடைக்கும். உங்களுக்கு தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் கௌரவமும், பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். செய்யும் வேலையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. அதிர்ஷ்டத்தின் ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் போன்றவற்றிற்கு ஏற்ற காலமாக இது அமையும். உங்கள் பணி பாராட்டப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். குடும்பத்தில் திடீர் நல்ல செய்தி வரலாம்.

வயிற்றுப்போக்கின் போது இந்த உணவுகள் கட்டாயம் சாப்பிடவே கூடாதாம் தெரிஞ்சுக்கோங்க…

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டம் தொழில் மற்றும் வியாபாரத்திற்கு ஏற்ற காலமாக அமையும். உங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும். செய்யும் வேலையில் வெற்றி உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிட்டு மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பதவி உயர்வு அல்லது நிதிப் பலன்களுக்கான வாய்ப்புகளும் இருக்கும். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவதற்கும் தற்போதைய சூரிய பெயர்ச்சி சாதகமாக இருக்கும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு, இந்த நேரம் வரப்பிரசாதமாக அமையப்போகிறது. பண பரிவர்த்தனைகள் செய்வதற்கும் நல்ல நேரம் உகந்தது.

நீளமான, அடர்த்தியான முடி வேணும்னா மருதாணி கூட இத மிக்ஸ் பண்ணி யூஸ் பண்ணுங்க…

விருச்சிகம்

கடகத்திற்கு செல்லும் சூரியனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்ப உறவுகளில் இனிமை அதிகரிக்கும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு, திருமண வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். பண விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இதன் காரணமாக உங்கள் நிதி நிலையும் வலுவாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். புதிய முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமிது. சமூகத்தில் உங்கள் மீதான மரியாதை படிபடியாக அதிகரிக்கும். சமீபத்தில் செய்த முதலீடுகள் லாபகரமாக இருக்கும். நிதி நிலை ஏற்றத்தால் வசதி வாய்ப்புகளும் உண்டாகும்.

கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி!!!

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியால், பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நேரமாக இருக்கப்போகிறது. இந்த நேரத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். அலுவலகத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கவும் அதிக வாய்ப்புண்டு. சூரியனின் இந்த பெயர்ச்சியால் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். திடீர் பண வரவுகளை உருவாக்குவதற்கான புதிய வாய்ப்புகளும் அமையும். வியாபாரிகள் தங்கள் புத்திசாலிதனத்தால் நல்ல லாபம் ஈட்டலாம். இந்த நேரம் உங்களுக்கு வரப்பிரசாதமாக அமையப்போகிறது. ஆரோக்கியத்தில் இருந்துவந்த தொல்லைகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். நிதி நிலை உயரும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க