Thursday, August 27, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

மணமணக்கும் மீன் குழம்பு!!!

A
Admin User
Journalist
December 29, 2021 5 min read 179 views
மணமணக்கும் மீன் குழம்பு!!!

மீன் குழம்பு வைப்பது எல்லாம் அவ்வளவு சுலபம் இல்லப்பா என்று புதிதாக சமைக்க தொடங்கி இருக்கும் பலர் நினைப்பது உண்டு. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றாம் இல்லை. யார் வேண்டுமானாலும் சுலபமாக மீன் குழம்பு வைக்கலாம். பேச்சுலர்ஸ் கூட இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஷீலா மீன் - 750 கிராம்
சின்ன வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
புளி கரைசல் - 1 கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து

தாளிக்க

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
வெந்தய பொடி - 1/2 டீஸ்பூன்

செய்முறை

*முதலில், மீனை கல் உப்பு சேர்த்து நன்கு சுத்தமாக கழுவி கொள்ளவும்.
*ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெய் ஊற்றவும். அதில், தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
*பின்னர் அதில் பச்சை மிளகாயை சேர்த்து அது வெள்ளையாக மாறும் வரை வதக்கவும்.
*அத்துடன், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி விட்டு, பொடியாக நறுக்கிய தக்காளியை சேரத்து அது மென்மையாகும் வரை வதக்கவும்.
*பின்னர், அடுப்பை குறைவான தீயில் வைத்து குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கிளறு கிளறி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
*குழம்பு நன்கு கொதித்து மிளகாய் தூள் பச்சை வாசனை போன பிறகு புளி கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
*பின்னர், குழம்பு உப்பு, காரம், புளிப்பு ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளவும்.
*இறுதியாக, கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்த மீனை குழம்பில் சேர்த்து 10 நிமிடங்கள் குறைவான தீயில் வேக விட்டு கறிவேப்பிலை தூவி இறக்கினால் மணமணக்கும் மீன் குழம்பு தயார்.

குறிப்பு

*மீன் குழம்பிற்கு எப்போதும் புளி அதிகமாக ஊற்ற வேண்டும். குழம்பில் மீன் போட்டவுடன் அதன் புளிப்பு சுவை சற்று குறைந்து விடும். எனவே, மீன் போடுவதற்கு முன்பு குழம்பில் சற்று புளி தூக்கலாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.
*வேண்டுமென்றால், குழம்பில் சிறிது சர்க்கரை சேர்த்து கொள்ளலாம். சுவை அட்டகாசமாக இருக்கும்.
*குழம்பில் மீனை போடும் போது, அடுப்பை குறைவான தீயில் வைத்து தான் போட வேண்டும். இல்லையென்றால், மீன் உடைந்து விடும்.
*ஒவ்வொரு மீனிற்கும் வேகும் நேரம் மாறும். ஷீலா, வஞ்சரம், வாவல் போன்ற மீன்கள் மிகவும் மிருதுவானவை. எனவே, அவை 10 நிமிடங்களுக்குள் வெந்துவிடும். அருகே இருந்து பார்த்து குழம்பை செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மீன் உடைந்து விடும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹15,010
தங்கம் (24k)
1 கிராம்
₹15,761
வெள்ளி
1 கிராம்
₹265
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க