Thursday, August 27, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

இந்த ஒரு டீ குடிச்சா போதும் சைனஸ் முதல் வாயு தொல்லை வரை எல்லாத்தையும் விரட்டிடலாம்...

A
Admin User
Journalist
July 04, 2022 6 min read 817 views
இந்த ஒரு டீ குடிச்சா போதும் சைனஸ் முதல் வாயு தொல்லை வரை எல்லாத்தையும் விரட்டிடலாம்...

இந்தியாவைப் பொறுத்தவரை கிராம்பு என்பது தவிர்க்க முடியாத ஒரு மசாலா பொருளாக விளங்குகிறது. கிராம்பு இல்லாத வீடே இருக்காது. அத்தகைய கிராம்பு சுவைக்கு மட்டுமல்ல அதன் மருத்துவ குணங்களிலும் சிறந்து விளங்குகிறது. ஏனெனில் இது மிகவும் முக்கியமானது மற்றும் பயனுள்ளது. இன்றைய காலகட்டத்தில், இருமல், சளி, வயிற்றுப் பிரச்சனைகள் அல்லது மாறிவரும் பருவ நிலையில் ஏற்படும் எந்த வகையான தொற்றுநோய்களையும் நீக்க கிராம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது தவிர, கிராம்புவில் அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் பண்புகள் நிறைந்துள்ளன. அவை தொண்டை வலியைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். அது மட்டுமின்றி, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை சிறப்பாக வைத்திருக்கவும் அவை செயல்படுகின்றன.

 

உண்மையில், ஆக்ஸிஜனேற்ற பண்புகளுடன், இது வைரஸ் எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகளையும் கொண்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தினந்தோறும் கிராம்பு டீ அல்லது டிகாஷன் குடித்தால், பருவகால நோய்களிலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். சரி இப்போது இந்த கட்டுரையில் கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு தயார் செய்வது என்பதைப்ப பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்…

 

கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

 

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்

 

கிராம்பு டீ அல்லது கஷாயத்தை குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. கிராம்பு கஷாயத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், உங்கள் உடல் எடை குறைவதோடு, செரிமானமும் சிறப்பாக இருக்கும்.

 

சளி மற்றும் இருமல்

 

கிராம்புகளில் வைரஸ் எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது சளி மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக போராடி நம் உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இருமல் வரும்போது கிராம்பு டீ குடித்து வந்தால், இருமல் நீங்கி தொண்டைப் புண் பிரச்சனையும் நீங்கிடும்.

 


இவற்றை உணவில் சேர்த்து கொண்டால் முக சுருக்கத்திற்கு விரைவில் குட்பை சொல்லிடலாம்…

 

பல்வலிக்கு நிவாரணம்

 

பற்களில் உங்களுக்கு கூர்மையான வலி இருந்தால், கிராம்பு டீ அல்லது கஷாயம் போட்டு குடிக்க வேண்டும். ஏனென்றால் அவ்வாறு செய்வது உங்கள் வலியைக் குறைத்து, உங்களை நன்றாக உணர வைக்கும்.

 

நோயெதிர்ப்பு சக்தி

 

கிராம்பு டீ நோய் எதிர்ப்பு சக்தி அல்லது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் சக்தி கொண்டது. மேலும், இது நோய் தொற்றுகளின் அபாயத்தில் இருந்து நம்மையும் நம் உடலையும் பாதுகாத்திடும்.

 

சிறந்த செரிமானம்

 

கிராம்பு டீ செரிமான அமைப்பை மேம்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. அதுதவிர, செரிமான கோளாறுகளால் உண்டாகக்கூடும் மலச்சிக்கல், வாயு மற்றும் அஜீரண பிரச்சனையை போக்க கிராம்பு கஷாயத்தை குடிக்கலாம்.

 

ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்க இந்த யோகாசனங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் போதும்…

 

சைனஸ் பிரச்சனை

 

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருந்தால், அதில் இருந்து நிவாரணம் பெற கிராம்பு கஷாயத்தை பருகி வர வேண்டும். ஏனெனில் கிராம்பு டீ குடிப்பது சைனஸ் போன்ற கடுமையான பிரச்சனையில் விடுபட உங்களுக்கு பெரிதும் உதவிடும்.

 

கிராம்பு டீ தயாரிப்பது எப்படி?

 

  • முதலில் கடாயில் சுமார் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • இப்போது தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், அதில் 5 முதல் 6 கிராம்புகளைச் சேர்க்கவும்.
  • அதன் பிறகு, நீங்கள் விரும்பினால் சிறிது தேயிலைகளையும் சேர்க்கலாம்.
  • இந்த கலவையை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அப்படியே குடிக்கலாம்.
  • உங்களுக்கு இனிப்பு சுவை வேண்டுமென்றால், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.

 

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹15,010
தங்கம் (24k)
1 கிராம்
₹15,761
வெள்ளி
1 கிராம்
₹265
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க