அசத்தலான சிக்கன் உப்பு கறி!!!
Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)
வீட்டில் இருக்கும் சாதாரண மசாலா பொருட்களை வைத்து சிறிது நேரத்திலேயே சிக்கனை வைத்து ஒரு அருமையான உப்பு கறி செய்ய முடியும் என்றால் அதை ட்ரை செய்யலாமே. சிக்கன் உப்பு கறி பிடிக்காதவர்களே இருக்க முடியாது. குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள். பேச்சுலர்ஸ் கூட இதை ஈஸியாக செய்துவிடலாம். வாருங்கள் இப்போது செய்முறை பார்ப்போம்…
தேவையான பொருட்கள்
சிக்கன் – 500 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5 (விதை நீக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மிளகு தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – ஒரு கையளவு (பொடியான நறுக்கியது)
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை
*முதலில் சிக்கனை மஞ்சள் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
*கழுவி சிக்கனில் உப்பு, பாதி இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
*மிதமான தீயில் அடுப்பை வைத்து சிக்கன் நன்கு வேக வைக்கவும்.
*அடுத்ததாக, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின்னர், நறுக்கிய வெங்காயம் மற்றும் மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
*சிக்கன் முழுவதுமாக வெந்தவுடன், வதக்கிய வெங்காய கலவையில் சேர்த்து 5 முதல் 7 நிமிடங்களுக்கு பிரட்டவும்.
*இறுதியாக மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சூடான மற்றும் காரசாரமான சிக்கன் உப்பு கறி பரிமாற தயார்.