செட்டிநாடு ஸ்டைல் இறால் சுக்கா!!!
A
Admin User
Advertisement
Editor's Choice
Affiliate link
Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)
Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.
இறால் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில், இந்த செட்டிநாடு இறால் சுக்காவை செய்து சுவைத்து பாருங்கள். இது சாதத்துடன் சாப்பிட அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். செய்வதும் மிக மிக எளிது தான். இறால் வேக வெகு குறைவான நேரமே எடுத்தும் கொள்ளும் என்பதால் இதனை விரைவில் செய்து முடித்திடலாம். குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவர். வாருங்கள், இப்போது செட்டுநாடு ஸ்டைலில் இறால் சுக்கா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்…
தேவையான பொருட்கள்:
- இறால் - 250 கிராம் (சுத்தம் செய்தது)
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை - சிறிது
- புளி - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
- உப்பு மற்றும் மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு…
- பூண்டு - 10 பல்
- இஞ்சி - 1 இன்ச்
- பச்சை மிளகாய் - 1
- கல்பாசி - சிறு துண்டு
- அன்னாசிப்பூ - சிறு துண்டு
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- சோம்பு - 1/4 டீஸ்பூன்
- பட்டை - 1/2 இன்ச்
- வரமிளகாய் - 1
- மிளகு - 1/2 டீஸ்பூன்
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 2
செய்முறை:
- முதலில் ஒரு மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு, அதில் 1/4 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- பிறகு அதில் அரைத்த வைத்துள்ள மசாலாவை சேர்த்து குறைவான தீயில் நன்கு கிளறி விட வேண்டும். மசாலாவில் இருந்து நீர் வற்றி, எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- இப்போது அதில் சுத்த் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மசாலா இறாலுடன் நன்கு ஒன்று சேர கிளறி விட வேண்டும். அடுத்து அதில் புளிச்சாற்றினை சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி, 3-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
- இறால் வெந்ததும், அதில் மீதமுள்ள நெய்யை ஊற்றி, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான செட்டிநாடு இறால் சுக்கா பரிமாற தயார்.
Image Courtesy: vidyascooking
Advertisement