ஆன்மீகம்

இந்த 6 ராசிக்காரர்கள் சுலபமாக எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிவிடுவார்களாம். உங்க ராசியும் இதுல இருக்கா?

A
Admin User
1 min read
இந்த 6 ராசிக்காரர்கள் சுலபமாக எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிவிடுவார்களாம். உங்க ராசியும் இதுல இருக்கா?
Advertisement
Editor's Choice
Affiliate link

FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

ஒருவர் எவ்வளவு கவனமாக இருந்தாலும், எத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது ஏதோ ஒரு வகையில் பிறரால் பயன்படுத்தி கொள்ளப்படுகிறார்கள். நாம் நம் வாழ்க்கையை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறோம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் ஒருவரை திசை திருப்புவதில் சிறந்து விளங்குபவர்கள், ஒரு விஷயம் அவர்களுக்கு நன்மை விளைவிக்கும் என்றால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இருப்பினும், சில ராசிக்காரர்களின் மனதை எளிதாக மாற்றிட முடியும். அத்தகையவர்கள் அதிகாரத்தை வேறொருவருக்குக் கொடுத்து, அவர்கள் விரும்பும் விதத்தில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அனுமதிக்கிறார்கள்.

சிலர் பிறர் மனதை கலைப்பதில் கை தேர்ந்தவர்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வது ஒருபோதும் எளிதான விஷயம் அல்ல. இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல், மற்றவர்கள் வெற்றி பெறுவதற்காக தங்களை அறியாமல் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறி அவர்களிடம் சிக்கி கொள்கிறார்கள். பிறரின் வார்த்தை ஜாலங்களில் இருந்து தப்பிக்க உண்மையில் வழி எதுவும் இல்லை. ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர்கள் சிறந்த பேச்சுத்திறனால் பிறரை தங்கள் விருப்பத்திற்கு நடக்க வைப்பதில் வல்லவர்களாகவும், மற்றவர்கள் எளிதில் பிறரால் ஆட்டி வைக்கப்படுபவர்ளாகவும் உலகில் இருந்து வருகின்றனர். இதில், முதல் வகை சாதகமாக இருப்பது இயல்பு. எனவே, இப்போது பிறரால் ஆட்டி வைக்கப்படும் 6 ராசிக்காரர்களைப் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சமநிலையை பேணுபவர்கள். அது அவர்களின் மகிழ்ச்சியை கெடுத்தாலும் கூட சமநிலையை கையாளுவார்கள். வெளிச்சம் இருந்தால் இருள் இருக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, அவர்கள் தங்கள் வழியில் வரும் அனைத்தையும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு உடையவர்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்று இந்த ராசிக்காரர்கள் உணர்ந்தால், அவர்கள் பிறரால் இயக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று அதை நடக்க அனுமதித்திடுவர்ள. ஆனால் இவர்கள் சமநிலையான ராசிக்காரர்கள் என்றாலும், அவர்கள் தங்கள் முடிவில் மிகவும் உறுதியற்றவர்களாக இருக்கலாம். துலாம் ராசி ஆண்களும் பெண்களும் எளிதில் முடிவெடுத்து அந்த முடிவிலேயே இறுதிவரை இருப்பவர்கள் கிடையாது. ஏனெனில் அவர்கள் ஏதேனும் சிறந்த தேர்வை நாம் இழக்க நேரிடுமோ என்ற அச்சத்திலேயே இருப்பர். அதன் காரணமாக, தங்களை பயன்படுத்தி கொள்ள நினைக்கும் அனைவரது சூழ்ச்சியிலும் தானாக சென்று அகப்பட்டு, அவர்களின் விருப்பத்திற்கேற் செயல்பட தொடங்குவர்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய இயல்புடையவர்கள். இவர்கள் எளிதாக கை பாவையாக இயக்குவதற்கு இலக்காகிறார்கள். எனவே, அவை எளிதில் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறக்கூடிய ராசியாகும். அவர்கள் ஒரு நட்பு கிடைத்தால் அதை மிகவும் ஆழமாக நம்புவதோடு, அவர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பதால், தங்களை ஒருவர் பயன்படுத்தி கொள்கிறார் என்ற உண்மை தெரிய வந்தாலும் அவர்களிடம் இருந்து விலகி செல்வது என்பது இவர்களுக்கு மிகவும் கடினமாக விஷயம். மீன ராசிக்காரர்கள் அதிகப்படியான கருணையும் அக்கறையும் கொண்டவர்கள். யாரையாவது காயப்படுத்துவதை அலட்சியம் செய்வது என்பது இவர்களுக்கு உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ சாத்தியமே இல்லை. யாரோ ஒருவர் இவர்களை ஆட்டி வைக்க இதுவே போதுமானது அல்லவா? எவரையும் சுலபமாக நம்பி விடுவது தான் மீன ராசிக்காரர்களின் இயல்பு. எனவே, யாராவது சோகமான கதை கூறினால், அதன் உண்மையை அறிந்து கொள்ளாமலேயே அவர்களின் வலையில் விழுந்துவிடுவர். ஆனால், மீண்டும் மீண்டும் அவர்களுக்கு துரோகம் செய்தாலும், அவர்கள் தங்கள் நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் இயல்பே அப்படித்தான்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் கண்டிப்பான வாழ்க்கை முறை மற்றும் கடினமான ஆளுமைக்கு நன்கு அறியப்பட்டவர்கள். அவர்கள் ஒரு இலக்கை நிர்ணயித்தால், அதை விட்டு விலகிச் செல்லாமல், அதை செய்து முடிப்பது மட்டுமே அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். யாராவது அவர்களை சுயநலவாதி அல்லது கடிவாளம் கட்டிய குதிரை என்று நினைத்தாலேே இவர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை. ஆனால், அதே வழக்கத்தைக் கடைப்பிடிப்பது மற்றும் எப்போதும் விதிகளைக் கடைபிடிப்பது மிகவும் சோர்வானதாக இருக்கலாம். மேலும், இந்த ராசிக்காரர்களைச் சுற்றியுள்ளோர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பர், ஏனென்றால் அவர்களுடன் யாராலும் நட்பு கொள்ளவோ, அவர்களை பின்தொடரவோ முடியாது. அவர்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவதற்கு நிறைய நேரமும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது. இது மற்றவர்களை இவர்களிடம் இருந்து தள்ளி வைத்துவிடும். மேலும் இது மகர ராசியினருக்கு ஒருவித பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது. அவர்களும் சில சமயங்களில் வேடிக்கையாகவும் இயல்பாகவும் இருக்க விரும்புகிறார்கள் மற்றும் மக்கள் தங்களைச் சுற்றி நிறைய நட்பு வட்டாரத்தை உருவாக்க விரும்புகிறார்கள். இது மோசடி செய்பவர்கள் மற்றும் பயன்படுத்தி கொள்பவர்களையே பெரிதும் ஈர்க்கும். எனவே, இந்த ராசிக்காரர்கள் எளிதில் பிறரால் பயன்படுத்தி கொள்ளக்கூடிய சில ராசிக்காரர்களின் ஒருவராக மாறுகிறார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சாகசப்பயணிகள் மற்றும் கேளிக்கைகளை பெரிதும் விரும்புபவர்கள். யாரும் கூண்டில் அடைக்க முடியாத சுதந்திரப் பறவைகள் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோரும் அவர்களை எப்படி தான் நினைக்க வேண்டுமென்றும் அவர்கள் விரும்புகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் எல்லாவற்றிலும் கடுமையாக நடந்து கொள்வதோடு, யாரும் அல்லது எந்தவொரு விஷயமும் இவர்களை தொந்தரவு செய்யாது. இருப்பினும், உண்மையில், அவர்கள் மிகவும் மென்மையான இதயமும், எளிய மனதையும் கொண்டுள்ளனர். அவர்கள் எதையும் விமர்சன ரீதியாக நினைக்க மாட்டார்கள் மற்றும் விரைவாக நம்பி விடுவார்கள். இது தனுசு ராசிக்காரர்களுக்கு தவறான தகவல்களைக் கொடுத்து அவர்களைக் கையாளுவதற்கான உந்துதலை அளிக்கிறது. ஏனெனில் உண்மைத்துவத்தை அவர்கள் ஒருபோதும் கவனிக்கமாட்டார்கள். தனுசு ராசி ஆண்களும் பெண்களும் எதிலிருந்தும் ஒதுக்கப்படுவதை வெறுக்கிறார்கள். ஒவ்வொரு தரப்பினரையும் தனது வாழ்க்கையாக நினைப்பதால், அவர்கள் ஒவெ்வாரு விஷயத்தில் சேர்க்கப்படுவதிலும் அதிக அக்கறை காட்டுகிறார்கள். இதன் காரணமாக, இந்த ராசிக்காரர்களை சீண்டுவதற்கு வேண்டுமென்றே இவர்களை விலக்குவதுதான் அவர்களின் யுக்தியாக இருக்கக்கூடும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் உணர்திறன் மற்றும் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள். மேலும் அவர்கள் காதலிக்க மிகவும் விரும்புபவர்கள். கடக ராசிக்காரர்களுக்கு மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று அவர்களின் உறவு. தங்களுக்கு நெருக்கமானவர்களை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க இவர்கள் எதையும் செய்வார்கள். இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் அவர்களின் உணர்ச்சிகளால் ஆளப்படுகிறார்கள். அதே உணர்ச்சிகள் சில சமயங்களில் சிறந்ததைப் பெறுகின்றன. அனைவரையும் மகிழ்விப்ப்தற்காக பெரும்பாலான நேரத்தை அவர்கள் செலவிடுவதால், யாரோ ஒருவர் அவர்களை தவறான கையாள முயற்சிக்கக்கூடும் என்பதை அறிவதைக் கூட இவர்கள் இழந்து விடுகிறார்கள். இதனால், மற்றவர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் தன்னலமற்ற அன்பு அவர்களைக் குருடாக்கி, பிறர் வஞ்சனைக்கு ஆளாக்குகிறது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அதிகமாக ஆராய்வதற்கும் அனுபவிக்கவும் விரும்புகிறார்கள். அவர்கள் ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தைப் பெறுவதற்கான எந்த வாய்ப்புகளையும் இழக்க விரும்பிவதில்லை. வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழ்வது அவர்களின் இயல்பு. எனவே, அவர்கள் நெருக்கமான வெளிப்பாட்டால் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். முன்பின் தெரியாதவர்களின் விஷயங்களில் அதிகமாக தலையிடுவது, அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்கும் ஆற்றலை இழக்கச் செய்கிறது. மேலும், மிதுன ராசிக்காரர்கள் பெரும்பாலான சமூக கூட்டங்களில் இடம் பெற முனைவதோடு, அவர்களின் கற்பனையில் தொலைந்து போகிறார்கள். பல விருப்பங்கள், பல்வேறு தேர்வுகள் இருப்பது இவர்கள் திணற செய்கிறது. எனவே, இவர்கள் ஒவ்வொரு விருப்பத்தையும் ஆராய விரும்புகிறார்கள். இதனால், நல்ல வாய்ப்பை ஒருபோதும் அவர்கள் தவறவிடுவதில்லை. இது அவர்களின் மூளையை பாதிக்கிறது மற்றும் யாரோ ஒருவர் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதில் இருந்தும் அவர்களை திசை திருப்புகிறது. மிதுன ராசிக்காரர்கள் அன்புக்குரியவர்களுடன் மோதலை வெறுக்கிறார்கள். ஏனெனில் அது அவர்களுக்கு இடையே தூரத்தை உருவாக்கக்கூடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். எனவே அவர்களின் நோக்கங்களின் மீது ஏதேனும் சந்தேகம் கொண்டாலும், அவர்களை எதிர்கொள்வதை இவர்கள் தவிர்க்கிறார்கள்.

Advertisement

Read Next