ஆரோக்கியம்

இவற்றை மைக்ரோவேவில் சூடுபடுத்தி உண்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்...

A
Admin User
1 min read
இவற்றை மைக்ரோவேவில் சூடுபடுத்தி உண்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்...
Advertisement
Editor's Choice
Affiliate link

FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

தற்போது பெரும்பாலானோர் வீடுகளில் மைக்ரோவேவ் பயன்படுத்துகின்றனர். அடுப்பை விட மைக்ரோவேவில் சமைப்பது சுலபம் என்று நினைக்கின்றனர். அதிலும் பலர் சமைத்த உணவு பொருட்களை சூடுபடுத்துவதற்காகவே மைக்ரோவேவை பயன்படுத்துகின்றனர். அது மிகவும் தவறான செயல். ஒரு குறிப்பிட்ட பொருட்களை மைக்ரோவேவில் சூடுபடுத்தும் போது அது மிகவும் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

குழந்தைகளின் பால்
பல வீடுகளில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பால் மைக்ரோவேவில் சூடுபடுத்தப்படுகிறது. இது மிகவும் தவறான செயல். உண்மையில், ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்து பாலை சூடாக்குவது புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்துவதோடு, குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கிறது. இனிமேலாவது, இந்த தவறை செய்வதை நிறுத்துங்கள். வேலை குறைவு என்பதற்காக குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள்.

சிக்கன்
நன்கு சமைக்கப்பட்ட சிக்கனை மைக்ரோவேவில் வைத்தால் அது நன்றாக சூடாகு. ஆனால் அது சரியானது கிடையாது. இப்படி சமைக்கப்பட்ட சிக்கனை மீண்டும் மைக்ரோவேவில் வைத்து சமைத்தால் அது உடலின் செரிமான அமைப்பை சேதப்படுத்தக்கூடும். உண்மையில், மைக்ரோவேவில் சிக்கனை சூடுபடுத்தும் போது அதன் புரத கட்டமைப்பு முற்றிலுமாக மாறிவிடும். எனவே, இனியும் அந்த தவறை செய்யாதீர்கள்.

எண்ணெய்
இது குளிர்காலம் என்பதால் பலரும் உறைந்த தேங்காய் எண்ணெயை சூடாக்க மைக்ரோவேவைப் பயன்படுத்துவது உண்டு. மைக்ரோவேவில் எண்ணெயை சூடாக்குவது, அதில் இருக்கும் நல்ல கொழுப்பின் தன்மையை மாற்றிவிடும் என்பதை மறவாதீர்கள். எனவே, தேங்காய் எண்ணெயை ஒருபோதும் மைக்ரோவேவில் வைத்து சூடாக்காதீர்கள். தேங்காய் எண்ணெய் மட்டுமல்ல எந்த எண்ணெயையும் மைக்ரோவேவில் சூடாக்க வேண்டாம்.

சாதம்
பெரும்பாலானோர் சமைக்கப்பட்ட அரிசி அதாவது சாதத்தை சூடாக்க மைக்ரோவேவ் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது தவறான செயல். ஏனென்றால், சாதத்தை மைக்ரோவேவில் வைத்து சூடாக்கி உண்பது ஃபுட் பாய்சனாக மாறக்கூடும். எனவே, முடிந்தவரை அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

காளான்
சமைக்கப்பட்ட காளானை மைக்ரோவேவில் சூடாக்கினால், அதில் உள்ள புரதம் வெளியேறுவிடும். எனவே, காளானை சமைத்த உடனே உட்கொள்வது சிறந்தது. இல்லையெனில், அது உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடும்.

Advertisement

Read Next