ஆன்மீகம்

உங்கள் ராசி படி எந்த வேலை செஞ்ச உங்களுக்கு சிறப்பாக இருக்கும் தெரியுமா?

A
Admin User
1 min read
உங்கள் ராசி படி எந்த வேலை செஞ்ச உங்களுக்கு சிறப்பாக இருக்கும் தெரியுமா?
Advertisement
Editor's Choice
Affiliate link

Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் மாற்றங்களைச் சந்திக்க நேரிடும். மேலும், ஒவ்வொரு ராசிகளுக்குமென தனித்துவமும் இருக்கிகறது. அந்த வகையில், உங்கள் ராசியின் படி உங்களுக்கு மிகவும் பொருத்தமான வேலை அல்லது தொழில் இருக்கிறது. எனவே, எந்த ராசிக்காரர்கள் எந்த தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதை இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மற்றும் கூர்மையான எண்ணம் கொண்டவர்கள். இத்தகைய குணங்கள் அவர்களை எந்தவொரு பதவிக்கும் தகுதியானவராகவும், அச்சமற்ற தலைவராகவும் ஆக்குகின்றன. அவர்களின் உடலில் ஆற்றல் அதிகமாக இருக்கும். எனவே, மேஷ ராசிக்காரர்கள் போலீஸ் அதிகாரி, ராணுவ வீரர், தீயணைப்பு வீரர், அறுவை சிகிச்சை நிபுணர் அல்லது கட்டிட தொழில் போன்றவற்றை தேர்வு செய்தால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் மனஉறுதி, விசுவாசம் மற்றும் நம்பகத்தன்மை கொண்டவர்கள். அவர்கள் தங்கள் வேலையில் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள். மேலும், தங்கள் பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிக்கும் ஆற்றலும் உடையவர்கள். நிதி ஆலோசகர், ஆடை வடிவமைப்பாளர், வக்கீல், மேலாளர் அல்லது இயற்கை சார்ந்த தொழில்களை தேர்வு செய்தால் சிறப்பானதாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் பன்முகத் திறமையும், நெகிழ்ச்சியும் உடையவர்கள். இருப்பினும், வேலையில் பதவி உயர்வு பெறுவதற்கு அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். பிறருடன் எளிதாக பழகுவதற்கு அவர்கள் நல்ல பேச்சுதிறனைக் கொண்டவர்கள். இந்த இராசிக்காரர்கள் ஏற்ற சிறந்த தொழில் என்றால் ஊடகத்துறை, ஆசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், மக்கள் தொடர்பு அல்லது தகவல் தொடர்பு ஆகியவை. இவற்றை தேர்ந்தெடுப்பதன் மூலம் வாழ்வில் பெரும் வெற்றியைப் பெற்றிடலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் பிரச்சனைகளைக் கையாளுவதிலும் மற்றும் ஏற்று கொண்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும் கை தேர்ந்தவர்கள். இவர்கள் எந்தவொர பொறுப்பையும் எளிதில் கையாளுவார்கள் மற்றும் சிக்கல்களை தீர்ப்பதிலும் வல்லவர்கள். அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் பிறருக்கு முன்னுதாரணமாக விளங்கக்கூடியவர்கள். எனவே, இந்த ராசிக்காரர்களுக்கு நர்சிங், கேட்டரிங், மெட்டீரியல் மேனேஜ்மென்ட், ஆசிரியப்பணி, மருத்துவம் அல்லது சமூகம் சார்ந்த தொழில்களால் வெற்றி கிட்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் லட்சியம் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் சில நேரங்களில் திமிர்பிடித்தவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களின் இயல்பு எப்போதும் அப்படியே இருக்காது. இவர்கள் குழுவாக இணைந்து பணியாற்றுவதில் வல்லவர்கள். மேலும், இந்த ராசிக்காரர்கள் அச்சமற்றவர்கள், பிடிவாத குணமுடையவர்கள் மற்றும் சுதந்திரமானவர்கள். இந்த ராசிக்காரர்கள் நடிப்பு, வடிவமைப்பாளர், ஈவென்ட் மேனேஜர், மார்க்கெட்டிங் மற்றும் அரசு வேலை போன்ற துறைகளில் முயற்சிதால் வெற்றியை அடையலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் நேர்த்தியாகவும் பரிபூரணமாக ஒரு வேலையை செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர்கள். அவர்களுடைய கண்கள் அவர்களுடைய வேலையில் முக்கிய இடம் வகிக்கிறது. அவர்கள் ஒரு விஷயத்தைப் பார்த்தால் சுலபமாக நினைவில் கொள்வார்கள். அவர்கள் பொதுவாக மகிழ்ச்சியான சுபாவம் உடையவர்கள். இந்த ராசிக்காரர்கள் ஆராய்ச்சியாளர்கள், முதலீட்டாளர்கள், மருத்துவர்கள், புள்ளியியல் வல்லுநர்கள், இயந்திர வல்லுநர்கள் மற்றும் நிர்வாக உதவியாளர்கள் போன்ற துறைகளை தேர்வு செய்ய வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அனைவருடனும் மிகவும் நட்புடன் பழகக்கூடியவர்கள். நீங்கள் நேரத்தை எப்போதும் மகிழ்ச்சியாக செலவிட விரும்பும் நபர்கள். அதுதவிர, இவர்கள் நேர்மறை ஆற்றலைப் பெற்றிருப்பதோடு, மற்றவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் குணமும் உண்டு. இவர்கள் முடிவெடுக்கும் திறனில் சிறந்தவர்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வெற்றியிலேயே முடியும். இவர்களுக்கு மனித வள மேலாளர், சட்ட ஆய்வாளர், விருந்தோம்பல் அல்லது ராஜதந்திரம் ஆகியவை மிகவும் பொருத்தமான தொழில்களாகும்.

விருச்சிகம்

விருச்சக ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்பட்டு அதிகமாக கோபப்படுபவர்களாக இருபார்கள். அவர்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்களாகவும், பெரும்பாலும் மர்மங்களை உடைக்கும் விஷயங்களில் பெரிதும் ஈர்க்கப்படுவார்கள். அவர்கள் என்ன மாதிரியாக ஒரு விஷயம் செயல்படுகிறார்கள் என்பதை அறிய மிகவும் விரும்புகிறார்கள். அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் உளவியலாளர், ஆசிரியர், அறுவை சிகிச்சை நிபுணர், பொறியாளர் அல்லது அறிவியல் துறையில் சேர்ந்தால் பெரிய சாதனை படைக்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் உற்சாகம், பொழுதுபோக்கு, நகைச்சுவை மற்றும் தாராள குணம் கொண்டவர்களாக இருப்பர். இருப்பினும், அவர்களின் ஒரே மாதிரியாக வழக்கம், சோம்பேறி தனம் ஆகியவை அவர்களின் வேலையைத் தடுக்கிறது. இந்த ராசிக்காரர்கள் சிறந்த வளர்ச்சி துறை அதிகாரிகள், பயிற்சியாளர், புலனாய்வாளர் அல்லது பயண முகவர் தொழிலைத் தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும்.

மகரம்

இந்த ராசிக்காரர்கள் நடைமுறைத் தேவை மற்றும் பொறுப்புகளைத் தெளிவாக அடையாளம் காணும் திறன் கொண்ட தொழில்களுக்கு மிகவும் பொருத்தமானவர்கள். அவர்கள் கடினமான மற்றும் பிடிவாதமான இயல்புடையவர்கள். எனவே, இந்த ராசிக்காரர்கள் வங்கி, நர்சிங், கற்பித்தல் அல்லது கணினி பொறியியல் பதவிகளுக்கு ஏற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் ஆர்வத்திற்கும் சுதந்திரத்திற்கும் பெயர் பெற்றவர்கள். யோசனைகள் தேவைப்படும் பதவிகளில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். அவர்கள் எப்போதும் புதிதாக எதையாவது கற்ற வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணமும், தங்கள் அறிவிற்கு மேல் செயல்பட வேண்டிய பதவிகளை விரும்புபவர்கள். இந்த ராசிக்காரர்கள் பயிற்சியாளர், வடிவமைப்பாளர், மத்தியஸ்தர், விஞ்ஞானி அல்லது தரவு ஆய்வாளர் போன்ற பதவிகளுக்குத் தகுதியானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களின் உயர்ந்த உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சிபூர்வமான தொலைநோக்கு பார்வை அவர்களை சிறந்த மனிதராக ஆக்குகிறது. இவர்கள் பொறுமை மற்றும் புரிதல் தேவைப்படும் வணிகத்திற்கு தகுதியானவர்களாகக் கருதப்படுகிறார்கள். வேலையை காட்டிலும், தொழிலில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் ஆட்சேர்ப்பு, நர்சிங், மருத்துவர், உளவியலாளர், சமூக பணி சார்ந்த பதவிகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்றிடலாம்.

Advertisement

Read Next