இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது தெரியுமா?
Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் மற்றும் நட்சத்திங்களின் இயக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். வாரந்திர ஜாதகம் கிரகங்களின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. மே மாதத்தின் இறுதி வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாக இருக்கும். சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

மேஷம்
இந்த வாரம் பெற்றோரின் ஆதரவையும் பெறுவீர்கள். பிறருடன் பேசும் போது நிதானமாக இருங்கள். உங்கள் பேச்சில் கடுமை தன்மையை உணரக்கூடும். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் போன்றவை உங்களுக்கு இனிமையான முடிவுகளைத் தரும். குடும்பத்தில் சுப நிகழச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம். புது வாகன யோகம் உண்டாகும். கோபம் மற்றும் ஆசை அதிகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

ரிஷபம்
இந்த நேரத்தில் உங்களின் பொறுமை குறையும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்தகளுக்கு முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வருமானம் பெருகும். ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றுக்கான செலவுகள் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் இடையூறு ஏற்படும். குழந்தைகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். மன அமைதி இருக்கும். ஆனால் மனதில் ஒருவித அதிருப்தியும் இருக்கும். குடும்பத்தில் சமயச் சடங்குகள் நடைபெறலாம். திட்டமிடாத செலவுகள் திடீரென அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை மூலம் உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும். பயணங்கள் சாதகமாக இருக்கும்.

மிதுனம்
பழைய சொத்துக்களால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். தாயிடமிருந்து பண உதவி கிடைக்கும். கலை மற்றும் இசையில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். பணியிட மாற்றம், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் அதிக உழைப்பு இருக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சொத்துக்களால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வருமானம் பெருகும். புது வாகன யோகம் கிடைக்கும்.

கடகம்
குடும்பத்தாருக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மதம் சார்ந்த பணியில் ஈடுபாடு இருக்கும். குழந்தை மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். உயர்கல்வி, ஆராய்ச்சி போன்றவற்றிற்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பணியில் திடீர் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருப்பிட மாற்றமும் சாத்தியமாகும். மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். தன்னம்பிக்கை நிறைந்தவராக இருப்பீர்கள். ஆனால் அதிக உற்சாகத்தைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தாய் மற்றும் வயதான ஒருவரின் மூலம் பண உதவி கிடைக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு நக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். ஆனால், இடமாற்றமும் இருக்கக்கூடும்.

சிம்மம்
உங்களுக்கு இந்த நேரத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தாய் மற்றும் தந்தையின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றிற்கு செலவு அதிகரிக்கும். இதனால் உங்கள் சேமிப்பு குறையும். படிப்பில் ஆர்வம் இருக்கும். கல்விப் பணிகளில் மகிழ்ச்சியான முடிவுகள் இருக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானத்தில் குறைவும், செலவுகள் அதிகரிப்பும் ஏற்படலாம். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். இயற்கையாகவே உங்கள் இயல்பில் எரிச்சல் இருக்கும். வார இறுதியில் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். ஆன்மீக சுற்றுலா செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

கன்னி
உங்களின் எரிச்சல் குணத்தால் வீண் பிரச்சனைகளில் சிக்கக்கூடும். ஆனாலும், உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் உற்சாகமும் ஆர்வமும் இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படக்கூடும். இடமாற்றம் ஏற்படவும் உங்களுக்கு வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களின் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். அலுவலகத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மன அமைதி இருக்கும் ஆனால் குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். வேலையில் பணிச்சுமை உண்டாகும். இருப்பினும், உங்கள் வருமானமும் அதிகரிக்கும். பணியிட மாற்றமும் சாத்தியமாகும்.

துலாம்
மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். ஆனால் பேச்சுவார்த்தையின் போது நிதானமாக இருங்கள். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். கல்விப் பணிகளில் மகிழ்ச்சிகரமான முடிவுகள் கிடைக்கும். ஆராய்ச்சிக்காக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அலுவலகத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இடமாற்றம் ஏற்படலாம். பேச்சில் கடுமை இருக்கும். எனவே, பேச்சில் நிதானத்தைக் கொண்டு வர முயலவும். ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றப் பாதை திறக்கும். வருமானம் பெருகும். இதனால் சேமிப்பு கணிசமாக அதிகரிக்கும். ஆனால் வேறு இடத்திற்கு மாற நேரிடலாம். இக்கட்டான சூழலில் நண்பர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்
உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். கல்வி மற்றும் அறிவுசார் வேலையில் புகழ் மற்றும் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாகன யோகம் அதிகரிக்கும். குடும்பத்துடன் புனித யாத்திரை செல்ல திட்டமிடலாம். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆனால், கோபமும் அதிகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தாயின் முழு ஆதரவும் கிடைக்கும். அரசியலில் ஈடுபடுவோரின் ஆசைகள் நிறைவேறும்.

தனுசு
உங்களுக்கு மன அமைதி இருக்கும். ஆனால் அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்கள் விருப்பத்திற்கு மாறாக சில புதிய வேலைகளைச் செய்ய நேரிடலாம். அலுவலகத்தில் உங்களுக்கு அதிகப்படியான பணிசுமையால் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பெரியவர்களின் பிரச்சனையால் குழந்தைகள் கஷ்டப்படுவார்கள். கடவுள் மீது நம்பிக்கை அதிகரிக்கும். இதனால் உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கலை மற்றும் இசையில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம்
மனதில் விரக்தி உணர்வுகள் எழலாம். தாயின் ஆதரவு கிடைக்கும். வேலை மாற்றம் ஏற்படும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆடை, ஆபரணங்களில் ஆர்வம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். நீங்கள் ஒரு பழைய நண்பரை சந்திக்கலாம். எந்த தருணத்திலும் நிதானத்தை கடைபிடிக்கவும். பேச்சில் மென்மையை கடைபிடியுங்கள். குடும்பத்தில் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழல் நிலவும். வேலையில் கடின உழைப்பு அதிகமாக இருக்கும். இதற்கான இனிமையான பலனை விரைவில் பெறுவீர்கள்.

கும்பம்
இந்த நேரத்தில் உங்களுக்கு மன அமைதி இருக்கும. ஆனால் அதிருப்தியும் இருக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். எதிரிகளை வென்று வெற்றி கிட்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தோருடன் மனஸ்தாபம் ஏற்படலாம். இத்தகைய சூழலில், பேச்சில் நிதானமாக இருங்கள். பேச்சில் கடுமை உணர்வுகள் இருக்கும். செலவுகள் அதிகரிக்கக்கூடும். கல்விப் பணிகளில் உங்களுக்கு வெற்றி கிட்டும். வேலை தொடர்பான பயணம் மேற்கொள்ள நேரிடலாம். நண்பர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள்.

மீனம்
இந்த காலக்கட்டத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இருப்பினும், உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. தாயிடமிருந்து நிதி உதவி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும், நண்பரின் உதவியால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். ஆனால் வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். மனதில் நம்பிக்கையும் விரக்தியும் கலந்த உணர்வுகள் இருக்கக்கூடும். இயற்கையாகவே உங்கள் இயல்பில் எரிச்சல் தன்மை இருக்கலாம். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.