Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
பயணம்

அமைதியான சூழல் மற்றும் சுத்தமான காற்றை அனுபவிக்க இந்த 3 நகரங்களுக்கு செல்லலாம்...

A
Admin User
Journalist
March 01, 2022 4 min read 73 views
அமைதியான சூழல் மற்றும் சுத்தமான காற்றை அனுபவிக்க இந்த 3 நகரங்களுக்கு செல்லலாம்...

யாருக்கு தான் சுற்றுலா செல்ல பிடிக்காது. அதிலும் புதிய இடங்களுக்கு, இயற்கை அழகை ரசிப்பதற்கு, வித்தயாசமான உணவுகளை சுவைப்பதற்கு என்று பலர் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வர். சிலர், அமைதியை தேடி சுற்றுலா செல்வதுண்டு. இன்றை பரபரப்பான வாழ்க்கையில், இரைச்சல், காற்று மாசு போன்றவை இல்லாத இடங்களுக்கு சென்று ஒரு வாரம் தங்கி வர வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. அப்படி நீங்களும் ஆசைப்படுகிறீர்கள், ஆனால் எங்கு செல்வதென்று தெரியவில்லையா? கவலையே வேண்டாம். இதற்காக வெளிநாட்டு எல்லாம் போக வேண்டும். நம் நாட்டிலேயே அற்புதமான இடங்கள் உள்ளன. இந்தியாவில் சுத்தமான காற்று, அழகான சூழ்நிலையை கண்டு மகிழ்வதற்கு ஏற்ற 3 இடங்களைப் பற்றி சொல்ல போகிறோம். இந்த நகரங்களுக்கு ஒரு முறை சுற்றுலா சென்று வந்தால் அங்கேயே தங்கிவிடலாம் என்ற எண்ணம் கூட தோன்றலாம்…

விசாகப்பட்டினம்

ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் மிகவும் பிரபலமான சிறந்த நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரத்தில் பல அம்சங்கள் உள்ளன. கடலின் ஓரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் மிகவும் அமைதியான மட்டுமின்றி, மாசுபாடின்றி திகழ்கிறது என்று கூட சொல்லலாம். இங்கே, நீங்கள் கடலின் நடுப்பகுதிக்கு சென்றும் அனுபவிக்க முடியும். விடுமுறை நாட்களில் நீங்கள் பல மலை பிரதேசங்களுக்கு கூட செல்லலாம். மேலும், இந்த நகரத்தின் எந்த பகுதியிலும் உங்களால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்.

ஐஸ்வால் (Aizawl)

இயற்கை எழில் கொஞ்சும் அழகு நிறைந்த மிசோரத்தின் தலைநகரான ஐஸ்வால் இந்தியாவின் தூய்மையான, காற்று மாசுபாடற்ற நகரங்களில் ஒன்றாகும். இங்கே நீங்கள் குறைந்த செலவில் சில நாட்களுக்கு தாராளமாக தங்கலாம். மேலும் இங்கு ஏரி, குளம், நீர்வீழ்ச்சி போன்ற பல இடங்களையும் பார்வையிடலாம். இந்த நகருக்கு சென்றால் நீங்கள் நிச்சயமாக வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவீர்கள்.

அமராவதி

ஆந்திராவின் விசாகப்பட்டினம் சுத்தமான காற்று மாசுபாடற்ற நகரம். அது போலவே, ஆந்திராவின் அமராவதியும் சிறந்த இடம். உண்மையில், இங்கு மாசுபாடு மிகவும் குறைவாக உள்ளது. மேலும், இங்கும் குறைந்த செலவில் பல இடங்களை சுற்றி பார்க்கலாம். அதனுடன் நடந்தே கூட அருகில் உள்ள இடங்களுக்கு செல்லலாம். உண்மையில், இது இயற்கை அழகையும் மற்றும் பல்வேறு ஆலய தரிசனங்களையும் அனுபவித்து ரசித்து பார்க்க முடியும். மேலும், இங்குள்ள மகிழ்ச்சியான வானிலை உங்களை உற்சாகத்தின் உச்ச கட்டத்திற்கு அழைத்து செல்லும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்கள்: குறைந்த செலவில் ஒரு சொர்க்கப் பயணம்!
வாசிக்க