Sunday, May 10, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

ஈஸியா வீட்டிலேயே செய்யலாம் வெஜ் மோமோஸ்!!!

A
Admin User
Journalist
May 12, 2022 4 min read 135 views
ஈஸியா வீட்டிலேயே செய்யலாம் வெஜ் மோமோஸ்!!!

மோமோஸ் இன்றைய காலகட்டத்தில் அனைவராலும் விரும்பப்படக் கூடிய ஒரு உணவாகி விட்டது. அதற்காக எப்போதும் அதை கடைகளில் மட்டுமே வாங்கி சாப்பிட வேண்டுமென்பதில்லை. வீட்டிலேயே கூட அதை சுலபமாக செய்திடலாம். இது மிகவும் சத்தான உணவு. ஏனென்றால், எண்ணெய் பொரிக்க தேவையில்லை. அதேபோல், இதில் பச்சை காய்கறிகள் உள்ளே வைக்கப்பட்டு ஆவியில் வேக வைத்து சாப்பிடுவதால் இது ஆரோக்கியமானது என்றே கூறலாம். கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு இது மாதிரியான ஆரோக்கியமான உணவுகளை ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுத்தால் வேண்டாம் என்று கூறலாம் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வீட்டிலேயே வெஜ் மோமோஸ் எப்படி செய்வதென்று இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்

  • மைதா - 1 கப்
  • முட்டைக்கோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
  • துருவிய கேரட் - 1 கப்
  • குடைமிளகாய் மற்றும் வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • கருப்பு மிளகு தூள் - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை

  • வெஜ் மோமோஸ் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு மிருதுவாக பிரட்டி 10 நிமிடத்திற்கு ஈரத்துணி போட்டு மூடி ஊற விடவும்.
  • இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • பிறகு, நறுக்கிய காய்கறிகள், குடைமிளகாய், இஞ்சி, கருப்பு மிளகு மற்றும் உப்பு சேர்த்து வதக்கி மூடி 5 நிமிடங்கள் வேக வைத்து, பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
  • அதன் பின்னர், பிரட்டி ஊற வைத்த மாவை சிறு சிறு துண்டுகளாக உருட்டவும். பின்னர், சிறிது மாவு தொட்டு சப்பாத்திக்கு தேய்ப்பது போல் மெல்லியதாக தேய்த்து கொள்ளவும்.
  • இப்போது உருட்டிய மாவிற்கு நடுவில் ஒரு டேபிள் ஸ்பூன் தயாரித்த காய்கறி கலவையை வைத்து உங்களுக்கு விருப்பமான வடிவில் மோமோவை தயார் செய்து கொள்ளவும்.
  • அதன் பிறகு, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, இட்லி தட்டுகளில் தயாரித்த மோமோவை வைத்து ஆவியில் 10-12 நிமிடங்கள் வேக விடவும்.
  • மோமோ வெந்தவுடன் அதை காரசாரமான சில்லி சாஸ் உடன் சூடாக பரிமாறினால் நிமிடத்தில் எல்லாம் தீர்ந்து விடும்.
  • இதை செய்வது மிகவும் சுலபம் தான். எனவே, ஒருமுறை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.
Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,150
தங்கம் (24k)
1 கிராம்
₹14,858
வெள்ளி
1 கிராம்
₹280
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நலமான வாழ்விற்கு எது மிக முக்கியம்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க