அழகு குறிப்புகள்

வேப்பிலையை இப்டி யூஸ் பண்ணா எப்படிப்பட்ட முகப்பரு பிரச்சனையையும் சரி செஞ்சுடலாம்...

A
Admin User
1 min read
வேப்பிலையை இப்டி யூஸ் பண்ணா எப்படிப்பட்ட முகப்பரு பிரச்சனையையும் சரி செஞ்சுடலாம்...
Advertisement
Editor's Choice
Affiliate link

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

மாறுபட்ட காலநிலை, மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக இன்றைய காலக்கட்டத்தில் முகப்பரு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட மக்கள் பல்வேறு வகையான அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இத்தகைய இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவது சில நேரங்களில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், தோல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட வீட்டு வைத்தியத்தின் உதவியை நீங்கள் நாடுவதே சிறந்தது. இது உங்களுக்கு நிச்சயம் உதவும்.

பருக்களை போக்க வேப்பிலையைப் பயன்படுத்தலாம். வேம்பு மிகவும் நன்மை பயக்கும் என்பதையும், அதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது என்பதையும் அனைவரும் அறிந்தது தான். உங்கள் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைக் குறைப்பதன் மூலம் பருக்கள் மற்றும் முகப்பருக்களுக்கு எதிராக வேம்பு பாதுகாக்கிறது. வேப்பிலையில் இருந்து தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக் மூலம் முகப்பரு மற்றும் பருக்களை சுலபமாக போக்கலாம். வேப்பிலையில் இருந்து தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகளைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

வேப்பிலை மற்றும் மஞ்சள்

10 முதல் 20 ப்ரஷ் வேப்பிலைகளை நன்றாக அரைத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். அதன் பிறகு இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி சுமார் 10 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும். இப்போது குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிடலாம். வேப்பிலை கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் வேப்பம்பொடியைக் கூட இதற்கு பயன்படுத்தலாம்.

தேன் மற்றும் வேப்பிலை

வேம்பு உங்கள் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை நீக்குகிறது மற்றும் தேன் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. இந்த இரண்டையும் சேர்த்து ஃபேஸ் பேக் செய்ய, 10-20 வேப்பிலைகளில் அரைத்து, அதில் இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும். அதன் பிறகு இந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து பின் நீரில் கழுவவும்.

முல்தானி மெட்டி மற்றும் வேப்பிலை

இந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்க 10-20 வேப்பிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு, அதில் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 2 டீஸ்பூன் முல்தானி ட்டி பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தயாரித்த இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் உலர்த்திய பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

Advertisement

Read Next