Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

மூட்டு வலியைப் போக்க உதவும் இந்த எண்ணெயை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்...

A
Admin User
Journalist
May 16, 2022 5 min read 65 views
மூட்டு வலியைப் போக்க உதவும் இந்த எண்ணெயை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்...

மூட்டு வலி என்பது வயதானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று. பெரும்பாலானவர்கள் இந்த பிரச்சனையால் தினந்தோறும் அவதியுறுகிறார்கள். கேட்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், மூட்டு வலியை சமாளிப்பது மிகவும் கடினமான ஒன்று. யாருக்கு இந்த பிரச்சனை இருக்கிறதோ அவர்களுக்கு நடப்பது என்பது மிகவும் சவாலானதாக இருக்கும். அதிலும், மாடி படி ஏறுவது முடியாத காரியம். மூட்டு வலியைப் போக்க பெரும்பாலானோர் மருந்து, மாத்திரைகளுக்கு பதிலாக இயற்கை வைத்தியத்தையே நம்புகின்றனர். பல வகையான எண்ணெய்களைப் பயன்படுத்தி வலியை குறைத்து கொள்கின்றனர். இருப்பினும் இந்த வலியை அவ்வளவு சுலபமாக போக்கிட முடியாது.

பூண்டு எண்ணெய்

மூட்டு வலியை போக்க உதவுவதில் சிறந்தது என்றால் அது பூண்டு. பூண்டை வைத்து தயாரிக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்துவது மூட்டு வலியை போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும், இந்த எண்ணெயை வெளியே கடைகளில் வாங்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. நாம் வீட்டிலேயே இந்த எண்ணெயைத் தயாரித்திடலாம். பல ஆரோக்கிய நிபுணர்களும் பூண்டு எண்ணெய் மூட்டு வலியைப் போக்குவதில் மிகவும் நன்மை பயக்கும் என்று கூறுகிறார்கள். பூண்டு எண்ணெயை எவ்வாறு தயாரிப்பது மற்றும் அதை பயன்படுத்துவது எப்படி என்பதை இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

பூண்டு எண்ணெய் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

  • கடுகு எண்ணெய் - 250 மில்லி
  • பூண்டு - 10-12 பற்கள் (தோலுரித்து நறுக்கிறது).
  • ஜாதிக்காய் - 2
  • அமிர்தவல்லி எனும் கிலோயின் உலர்ந்த தண்டு - 50 - 60 கிராம் (சிறு துண்டுகளாக நறுக்கியது)

செய்முறை

முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகு எண்ணெய் ஊற்றவும். இப்போது அதில் தோலுரித்து நறுக்கிய பூண்டு, ஜாதிக்காய், அமிர்தவல்லி தண்டு ஆகியவற்றை போடவும். இந்த பொருட்களை கடுகு எண்ணெயில் போட்டு 1 மணி நேரம் குறைந்த தீயில் சமைக்கவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்த எண்ணெயை அடுப்பில் இருந்து இறக்கிடவும். பிறகு, அதை ஆறவைத்து வடிகட்டி ஒரு டப்பாவில் ஊற்றி வைத்து கொள்ளவும். இப்போது, மூட்டு வலியைப் போக்க உதவும் பூண்டு எண்ணெய் தயார்.

பூண்டு எண்ணெய் பயன்படுத்தும் முறை

  • மூட்டு வலியைப் போக்க, பூண்டு எண்ணெயை மூட்டுகளில் தேய்த்து 5-7 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.
  • குளிர்ந்த எண்ணெய் கூட நன்மை பயக்கும் என்றாலும், எண்ணெயை லேசாக சூடேற்றி பயன்படுத்தினால் வலி மற்றும் வீக்கத்தை விரைவாக அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும்.
  • தினமும் இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு பூண்டு எண்ணெயைக் கொண்டு மூட்டுகளை மசாஜ் செய்ய வேண்டும்.
  • இந்த எண்ணெயைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பயன்படுத்தி வந்தால், நிச்சயமாக வலியிலிருந்து விடுபடுவதை உணரலாம்.
Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க