Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

என்ன செஞ்சாலும் பொடுகு தொல்லை போகலையா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

A
Admin User
Journalist
December 21, 2021 4 min read 59 views
என்ன செஞ்சாலும் பொடுகு தொல்லை போகலையா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

வெயில் காலம், மழை காலம், குளிர் காலம் என எல்லா காலத்திலும் கூந்தலை பாதிக்கக்கூடிய ஒரே பிரச்சனை பொடுகு பிரச்சனை தான். இதற்கு தலையில் சேரும் அழுக்கு, மாசு, சரியாக சுத்தம் செய்யாமை என பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பொடுகை போக்குவதற்கு விளம்பரங்களை பார்த்து பல்வேறு கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்படியெனில் முதலில் அவற்றை நிறுத்துங்கள். கெமிக்கல் உபயோகித்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கத் தான் செய்யும். பொடுகை போக்க வீட்டில் உள்ள சில பொருட்களே போதுமானது. அவற்றை பற்றி தான் இப்போது கூற போகிறேன். அவ்வாறு செய்யும் போது கூந்தல் ஆரோக்கியமும் மேம்படும். பொடுகு தொல்லையும் நீங்கிவிடும். வாருங்கள் பொடுகை போக்க உதவும் சில வீட்டு வைத்திய முறைகளை பார்ப்போம்…

எலுமிச்சைச் சாறு

அனைத்து வகையான பொடுகு தொல்லைக்கும் எலுமிச்சைச் சாறு ஏற்றது. ஆனால், அதனை முறையாக உபயோகிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் முடி வறட்சி அடையக்கூடும். பாதி எலுமிச்சை பழ சாற்றை தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் கலந்து ஸ்கால்ப்பில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலையை அலசி விடவும். வாரத்திற்கு 2 முறை இதை செய்து வர பொடுகு முற்றிலும் நீங்கிவிடும்.

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயிலில் ஆன்டிபாக்டீரியல் மற்றும ஆன்டிவைரல் பண்புகள் உள்ளன. அவை, பொடுகு பிரச்சனையை நீக்கிட மிகவும் உதவிடும். சில துளிகள் டீ ட்ரீ ஆயிலை நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் கலந்து பயன்படுத்துங்கள். 4 முதல் 5 முறை இவ்வாறு செய்தாலே பொடுகு தொல்லை காணாமல் போய்விடும்.

தயிர்

பொடுகு தொல்லைக்கு தயிர் உபயோகிப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், தயிர் பொடுகு நீக்குவதோடு, கூந்தலுக்கு ஊட்டமும் அளித்திடும். ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தயிரில் கலந்து ஸ்கால்ப்பில் படும் படி நன்கு தேய்ந்து சிறிது நேரம் கழித்து அலசிடவும். சில நாட்களிலேயே நீங்கள் வித்தியாசத்தை உணர்வீர்கள்.

வேம்பு மற்றும் துளசி நீர்

சிறிது நீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து அதில் சிறிது வேப்ப இலை மற்றும துளசி இலைகளை சேர்த்து நீர் பாதியாக குறையும் வரை நன்கு கொதிக்க விடவும். பின்னர், அந்த நீரை வடிகட்டி ஆற வைக்கவும். தயார் செய்ய நீரை பயன்படுத்தி முடியை அலசினால் பொடுகு தொல்லை காணாமல் போய்விடும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க