Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

கோடை வெயிலில் வாடிய உங்கள் சருமத்தை மீண்டும் பிரகாசிக்க வைக்க இவற்றைப் பயன்படுத்தி பாருங்கள்...

A
Admin User
Journalist
April 29, 2022 6 min read 56 views
கோடை வெயிலில் வாடிய உங்கள் சருமத்தை மீண்டும் பிரகாசிக்க வைக்க இவற்றைப் பயன்படுத்தி பாருங்கள்...

கோடைகாலம் வந்தாலே படுத்தி எடுக்கும் வெயிலோடு, சருமத்தைப் பற்றிய கவலையும் பெண்களை தொற்றி கொள்ளும். இந்த நாட்களில் வெளியே செல்ல எவருக்குமே தைரியம் இருக்காது. அதிலும், அக்னிநட்சத்திரத்திற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில், வலுவான சூரிய ஒளி காரணமாக தோல் எரிச்சலும், சரும நிறம் மங்குவதும் நடக்கக்கூடும். சூரியனின் புற ஊதா கதிர்கள் சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதோடு, வெயில், தோல் பதனிடுதல் மற்றும் வறண்ட சருமத்தை ஏற்படுத்துகிறது. இப்போது உங்கள் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும் சில எளிய வழிமுறைகளை இந்த கட்டுரையில் கூற போகிறேன். நம் வீட்டில் சில பொருட்களை வைத்தே, சூரிய ஒளியால் பாதித்த நம் சருமத்தின் அழகை சுலபமாக மீட்டெடுக்க முடியும் என்றால் அதை முயற்சிப்பதில் என்ன தவறு???

அடிக்கடி தண்ணீர் குடியுங்கள்

கோடையில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், உங்களுக்கு அளவிற்கு அதிகமாக வியர்த்தால், தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும். உண்மையில், இது உங்கள் உடலில் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுத்திடும். மேலும், சூரிய ஒளி சருமம் கருத்தல், வியர்க்குரு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். வியர்வை உங்கள் உடலில் உள்ள அனைத்து நீரையும் வெளியேற்றிவிடும் என்பதால் அவ்வபோது தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

கற்றாழை ஜெல்

உண்மையில், கற்றாழை ஜெல் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவிடும். இந்த ஜெல்லை உங்கள் முகத்தில் பயன்படுத்துவது நல்ல பலனைக் கொடுக்கும். இதில் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துகள் உள்ளன. இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. வீட்டில் இருக்கும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் இல்லாத ஜெல்லாக பார்த்து வாங்கி பயன்படுத்தலாம்.

தயிர்

தயிரில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. ஆராய்ச்சியின் அடிப்படையில், நீங்கள் அதை சூரிய ஒளி மற்றும் சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம். இது சரியான அளவு pH அளவைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இது வெப்பம் மற்றும் அதனால் உண்டாகும் வீக்கத்தைக் குணப்படுத்த மிகவும் நன்மை பயக்கும்.

பால்

சருமத்திற்கு பாலை பயன்படுத்துவது என்பது மிக சுலபமான ஆனால, பெரும் நன்மைகளை பயக்கக்கூடியது. உண்மையில், இதில் வைட்டமின் டி, ஈ மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. ஒரு பாத்திரத்தில் காய்ச்சாத பச்சை பாலை எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அதன் பிறகு, நீங்கள் அதை காட்டன் உருண்டையில் நனைத்து வெயிலால் பாதித்த இடத்தில் தடவவும். இதனால் வெயிலின் தாக்கம் விரைவில் குணமாகும்.

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க உதவும் சிறப்பு குறிப்புகள்

  • வெளியே செல்லும் முன்பு உங்கள் நன்கு மூடிக்கொள்ளுங்கள். தலை, கை, கால் என வெயில் படும் இடங்களை நன்கு மூடி மறைத்து கொள்வது சிறந்தது.
  • சன்ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்த வேண்டியது அவசியம். கோடை காலம் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சருமத்தை பாதுகாத்திடும்.
  • மேலும், வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். வெயில் தணிந்ததும் அல்லது வெயில் வருவதற்கு முன்பு வெளியே செல்லும் வேலைகளை முடித்துவிட முயலுங்கள்.
  • அப்படி வெயிலில் செல்லும் நிலை ஏற்பட்டாலும் நிழல் இருக்கும் இடமாக பார்த்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க