லிப்ஸ்டிக் போடாமலே உங்க உதடு ஜொலிக்க இத செய்யுங்க போதும்...
FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White
இன்றைய காலகட்டத்தில் சருமத்தை முறையாக பராமரிப்பது என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. அதிலும், சூரிய ஒளியில் சரும நிறம் மாறாமல் பாதுகாப்பது சற்று கடினமான ஒன்று. இது நமது அழகைக் குறைத்திடும். இதன் காரணமாக பெண்கள் அழகு நிலையங்களில் நிறைய பணத்தையும், நேரத்தையும் செலவிடுகின்றனர். ஆனால், சில நேரங்களில் அது பலனளிக்காமலும் போகக்கூடும். முகத்திற்கு கண் எப்படி அழகோ, அதே மாதிரி தான் உதடும். உதடிற்கு சாயம் பூசாமல் எந்த பெண்ணையும் பார்ப்பது கடினம். ஆனால், விலையுயர்ந்த லிப்ஸ்டிக் போட்டால் தான் உங்கள் உதடு அழகாக பிங்க் நிறத்தில் இருக்கும் என்றில்லை. இயற்கையாக நம் உதட்டின் நிறத்தை அழகாக மாற்றி விட்டால், பின்னர் இந்த லிப்ஸ்டிக் எல்லாம் தேவையே படாது. வாருங்கள், வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே உதட்டின் நிறத்தை எப்படி பிங்க் நிறத்தில் மாற்றுவது என்று தெரிந்து கொள்வோம்…
குங்குமப்பூ மற்றும் பால்
குங்குமப்பூவை பயன்படுத்துவதால் உதடுகளின் கருமையும் நீங்கும். அதற்கு, காய்ச்சாத பச்சைப் பாலில் குங்குமப்பூவைக் கலந்து, இரவில் உதடுகளில் தடவி விட்டு தூங்க வேண்டும். பின்னர், காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிட வேண்டும்.
பீட்ரூட்
பீட்ரூட் இயற்கையாகவே அற்புதமான பிங்க் நிறத்தை கொண்டது. அதனை உதட்டில் தேய்ப்பதன் மூலம் உங்கள் உதடு லிப்ஸ்டிக் போட்டதை விட இன்னும் அழகாக தெரியும். அதற்கு, பீட்ரூட்டை நறுக்கி அந்த துண்டுகளை உதட்டில் தடவலாம் அல்லது அதன் சாற்றில் எலுமிச்சை சாறு கலந்தும் தடவலாம். தினமும் இப்படி செய்வதால் உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாகவும், பளபளப்பாகவும் மாறும்.
மாதுளை
மாதுளையும் நிறத்தில் சிறந்தது. மாதுளை பழத்தின் சாறு உதட்டின் கருமையை நீங்குவதில் பெரிதும் உதவக்கூடியது. அதற்கு, சிறிது மஞ்சளுடன் மாதுளை சாறை கலந்து உதடுகளில் தடவவும். சுமார் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
ரோஜா இதழ்கள்
பொதுவாக பெண்களின் உதட்டை ரோஜா பூவின் இதழ்களோடு ஒப்பிடுவது வழக்கம். எனவே, உதடுகளின் கருமையை நீக்குவதில் ரோஜா இதழ்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு ரோஜா இதழ்களை சிறிதளவு கிளிசரின் சேர்த்து அரைத்து அந்த கரைசலை தினமும் இரவில் உதடுகளில் தடவி, காலையில் எழுந்து கழுவ வேண்டும். இப்படி செய்வது நம்ப முடியாத அளவிற்கு சிறந்த பலனை அளிக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சை சாற்றை உதடுகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் தேய்த்து வரவும். சுமார் 10 நிமிடம் இதை ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிடவும். உண்மையில், சரும கருமையை அகற்றுவதில் எலுமிச்சை சாறு பயன்படுத்துவது மிகவும் பயனுள்ள வழியாகும்.