Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

அடிக்கடி கால் வீக்கத்தால் அவதிப்படுறீங்களா? அப்ப இத ட்ரை பண்ணுங்க உடனடி நிவாரணம் கிடைக்கும்...

A
Admin User
Journalist
May 10, 2022 5 min read 60 views
அடிக்கடி கால் வீக்கத்தால் அவதிப்படுறீங்களா? அப்ப இத ட்ரை பண்ணுங்க உடனடி நிவாரணம் கிடைக்கும்...

கால்களில் வீக்கம் என்பது இன்றைய காலக்கட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. பாதங்களில் வீக்கம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், வயதாவதன் அறிகுறி, உடல் செயல்பாடு குறைதல், பாதங்கள் மற்றும் கணுக்கால் காயங்கள் போன்றவை பாத வீக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். அதே நேரத்தில், கர்ப்ப காலத்தில் பாதங்கள் வீக்கம் ஏற்படுவது சாதாரணமானதாக இருக்கலாம். இது தவிர, கால்களில் சீரான இரத்த ஓட்டம் இல்லாததால் கூட, இந்த பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். மேற்கூறிய ஏதாவது காரணத்தாலோ அல்லது வேறு காரணத்தாலோ பாதங்களில் அடிக்கடி வீக்கம் ஏற்பட்டு அவதிப்படுகிறீர்களா? அப்படியெனில், இந்த கட்டுரை உங்களுக்கானது. பாத வீக்கத்தை உடனடியாக போக்கிட உதவும் எளிய வீட்டு வைத்தியங்களைப் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்…

கல் உப்பு

கால்களின் ஏற்படக்கூடிய வீக்கத்தைக் குறைக்க, வெதுவெதுப்பான நீரில் கல் உப்பைச் சேர்க்கவும். பின்னர் உங்கள் கால்களை 15 முதல் 20 நிமிடங்கள் அந்த நீரில் ஊற வைக்கவும். உண்மையில், உப்பில் மெக்னீசியம் சல்பேட் உள்ளது. இது தண்ணீரில் கரைக்கப்படும் போது தோல் வழியாக உங்கள் உடலுக்குள் மெக்னீசியம் சுலபமாக உறிஞ்சப்படுகிறது. அதனால், பாதங்களில் உண்டாகும் வீக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வலியை போக்குகின்றன.

மசாஜ்

கால் வீக்கத்தில் இருந்து நிவாரணம் பெற உதவக்கூடிய மிக எளிமையாக வழி தான் மசாஜ். வீக்கம் இருக்கக்கூடிய பகுதியில் வலி நிவாரண தைலம் தடவி, மெதுவாக மசாஜ் செய்தால் வலி குறைவதுடன், வீக்கமும் படிபடியாக குறைந்து விடும்.

ஐஸ் பேக்

கால் மற்றும் கணுக்கால் காயம் காரணமாக பல நேரங்களில் வீக்கம் போன்ற பிரச்சனையைச் சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஐஸ் பேக்கைப் பயன்படுத்தலாம். உண்மையில், ஆல்கஹால் உட்கொள்வதால் ஏற்படக்கூடிய வீக்கத்தை குறைக்கவும் இந்த சிகிச்சை செயல்படுகிறது. ஐஸ் பேக் என்றால், ஐஸ் கட்டிகளை ஒரு சுத்தமான துணியில் வைத்து கட்டி, அதனை பயன்படுத்தி ஒத்தடம் கொடுப்பது தான்.

கால்களை சற்று உயரத்தில் வைத்திருப்பது

கால் வீக்கத்தைக் குறைக்க கால்களை சற்று தூக்கி உயரத்தில் வைத்து உட்காரலாம். உண்மையில், இந்த சிகிச்சையானது கணுக்கால் அல்லது பாதத்தில் உண்டாகும் வீக்கத்தைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முதுகு தரையில் படும் படியாக படுத்து, கால்களை சுவரின் மேலேயோ அல்லது 2 அல்லது 3 தலையணைகளை அடுக்கி வைத்து அதன் மேலோ வைத்து படுக்கலாம். அவ்வாறு படுப்பது கால் வீக்கத்தைக் குறைத்திட உதவும்.

மெக்னீசியம் நிறைந்த உணவுகள்

மெக்னீசியத்தின் அளவு உடலில் குறையும் போது தான் உடலில் நீர் தேங்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக, பாதங்களில் வீக்கம் ஏற்பட்டால், நீங்கள் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதே சிறந்த தீர்வாக அமையும். அதற்கு நீங்கள் மெக்னீசியம் நிறைந்த உணவுகளான டோஃபு, கீரை, முந்திரி, பாதாம், டார்க் சாக்லேட், ப்ரோக்கோலி மற்றும் அவகேடோ போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க