Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இத ஃபாலோ பண்ணுங்க போதும்...

A
Admin User
Journalist
March 26, 2022 6 min read 70 views
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இத ஃபாலோ பண்ணுங்க போதும்...

கோடைகாலம் வந்தாலே எல்லாருக்கும் வெயிலின் உஷ்ணம், வியர்குரு, எரிச்சல், வியர்வை போன்ற பிரச்சனைகளைக் கண்டு பயம் வந்து விடுவது சகஜம் தான். அதிலும், இன்னும் மார்ச் மாதமே முடியாத நிலையில் வெயில் அதன் ருத்ரதாண்டவத்தை இப்போதே தொடங்கி இருப்பது அனைவரையும் பெரிதும் வாட செய்துள்ளது. வருடத்தில் இந்த கோடைகாலத்தில் மட்டும் மக்கள் ஒரு புதுவிதமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அன்றாட வாழ்க்கையில் சிறு சிறு விஷயங்களை செய்து நம்மை வெயிலின் கொடுமையில் இருந்து காத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், வெயிலின் தாக்கம் நம்மை படாதபாடு படுத்திவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கு உதவக்கூடிய சில முக்கிய குறிப்புகளைத் தான். இந்த கட்டுரையில் உங்களுக்கு சொல்ல போகிறேன்…

தலையையும் முகத்தையும் மறைப்பது

கோடையின் கொளுத்தும் வெயிலில் வெளியே செல்லும் முன்பு உங்கள் தலையை துணியால் மறைக்க மறக்காதீர்கள். இல்லையெனில், தலைவலி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் வரலாம். எனவே, வெளியே செல்லம் முன்பு தலையை ஒரு துணியால் அல்லது தொப்பியின் உதவியால் மறைத்து கொள்ளுங்கள். அதே நேரத்தில், உங்கள் முகத்தையும் பாதுகாக்க முழு கை ஆடைகளை அணியுங்கள். வெயிலில் சருமம் தெரியும்படியான ஆடைகளை இந்த கோடையில் தவிர்ப்பது மிகவும் நல்லது.

வெங்காயம்

கோடை வெயிலின் வெப்பத் தாக்குதலைத் தவிர்க்க வெங்காயம் ஒரு சிறந்த மருந்து. வெயிலில் செல்வதற்கு முன்பு வெங்காயத்தை நகங்களில் தேய்த்து செல்லுங்கள். இவ்வாறு செய்வதால் கை கால்களில் வெப்பத்தின் உஷ்ணத்தை அதிகமாக உணர முடியாது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு இது மிக மிக உதவியாக இருக்கும். இனி சிக்னலில் நிக்கும் போது உங்கள் கால் விரல்கள் எரிச்சலை உணராமல் தவிர்க்க இந்த வெங்காய டிப்ஸைப் பயன்படுத்தி பாருங்கள்.

ஆரோக்கியமான பானங்கள்

கோடையில் வெப்பத்தைத் தவிர்க்க, உங்கள் உணவில் எலுமிச்சை, சர்பத், மாம்பழச்சாறு, பழச்சாறு மற்றும் காய்கறி சாறு போன்ற ஆரோக்கியமான பானங்களைச் சேர்க்க மறக்காதீர்கள். இவற்றை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம், உங்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் நீர்ச்சத்து குறைப்பாட்டை சமன் செய்வதோடு, உடலின் வெப்பம் அதிகரிக்காமலும் குறைக்கும். கோடையில் அடிக்கடி ஏற்படும் உடல் சூட்டு பிரச்சனையைத் தவிர்க்க ஆரோக்கியமான பானங்களை தினந்தோறும் பருகி வாருங்கள்.

உணவு முறை

கோடைகாலத்தில் வெளியே சென்று வேலை செய்வோர் எக்காரணம் கொண்டும் வெறும் வயிற்றில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், வெறும் வயிற்றில் செல்வதால் வெப்பத்தின் தாக்கும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதற்கு தயிர், தக்காளி, தேங்காய் போன்ற குளிர்ச்சியான பொருட்களை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பாடி மாஸ்க்

கோடைகாலத்தில் உங்கள் உடலை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க இந்த பாடி மாஸ்க் போட்டு குளியுங்கள். வெயிலில் அலைந்து திரிந்து வேலை பார்ப்பவர்களுக்கு இது நிச்சயம் பெரிய நிவாரணமாக அமையும். அதற்கு, குளிப்பதற்கு முன், பார்லி மாவு மற்றும் வெங்காயத்தை ஒன்றாக சேர்த்து அரைத்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். அதனை, உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு, செய்வதால் வெயிலின் தாக்கத்தினால் உடலுக்கு ஏறப்பட்ட பாதிப்புகள் நீங்கிடும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க