அழகு குறிப்புகள்

முடி வெடிப்பை சரி செய்ய இந்த எண்ணெயை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தி பாருங்கள்...

A
Admin User
1 min read
முடி வெடிப்பை சரி செய்ய இந்த எண்ணெயை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தி பாருங்கள்...
Advertisement
Editor's Choice
Affiliate link

Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

கூந்தல் வறட்சி, பொடுகு தொல்லை அல்லது முடி வெடிப்பு போன்றவற்றிற்கு பல காரணங்கள் இருக்கலாம். இரண்டு முகம் கொண்ட முடிக்கு சிகிச்சையளிக்கப்படாமல் இருந்தால், அது முழு தோற்றத்தையும் கெடுத்துவிடும். ஆரோக்கியமற்ற, வலுவிழந்த கூந்தல் எப்போதும் ஒருவரின் அழகைக் கெடுத்து வறண்டு காணப்படும். பொலிவான கூந்தலைப் பெற வேண்டுமெனில் அதற்கு முதலில் சரியாக எண்ணெய் தேய்க்க வேண்டும். அதற்காக விலையுயர்ந்த எண்ணெய், சிகிச்சை முறைகளை செய்ய வேண்டிய எந்த அவசியமுமில்லை. வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய எண்ணெய்களில் எந்த ரசாயனமும் இருக்காது என்பதால் அவை கூந்தலுக்கு நல்ல பொலிவையும், ஊட்டத்தையும் அளிக்கும். இந்த எண்ணெகளை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். சரி, அந்த எண்ணெய்களை எப்படி வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துவது என்பதைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்…

கருஞ்சீரகம் மற்றும் எள் எண்ணெய்

கருஞ்சீரகம் மற்றும் எள் இந்த இரண்டு பொருட்களுமே கூந்தலுக்கு மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் எள் எண்ணெய் அதாவது நல்லெண்ணெயை எடுத்து கொள்ளவும். அத்துடன் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து சிறிது நாட்கள் அப்படியே வைத்து விடவும். இந்த எண்ணெயை வாரம் இரு முறை என தொடர்ந்து தடவவும். இது முடியை வலுவடையச் செய்வதுடன், கூந்தல் வெடிப்பையும் அகற்றிடும்.

வெங்காய எண்ணெய்

வெங்காய எண்ணெய் முடிக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீங்கள் வீட்டிலேயே வெங்காய எண்ணெய் தயார் செய்ய விரும்பினால், ஒரு பாத்திரத்தில் வெங்காய சாறு எடுத்து, அதில் தேங்காய் எண்ணெய் மற்றும் வெந்தயத்தை சேர்த்து கலந்து ஒரு நாள் ஊற வைகக்கவும். இப்போது இந்த வெங்காய எண்ணெயை தலைமுடியில் தொடர்ந்து தடவி வந்தால், முடியில் கொட்டாமல் தடுப்பது, கூந்தல் வளர்ச்சியும் மேம்படும்.

முருங்கை-பிரிங்ராஜ் எண்ணெய்

மொரிங்கோ என்றழைப்படும் முருங்கையைப் போலவே, பிரிங்கராஜும் தலைமுடிக்கு சிறந்த சுத்தப்படுத்திகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது கூந்தல் நுனி உடைவுகளைக் குறைத்து மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. இந்த எண்ணெய் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை எடுத்து, அதனுடன் மோரிங்கா-பிரிங்கராஜ் இரண்டையும் சமஅளவு சேர்க்கவும். இப்போது அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் சூடேற்றவும். பின்னர், அடுப்பை அணைத்து எண்ணெயை ஆற வைத்து ஒரு டப்பாவில் ஊற்றி வைத்து கொள்ளவும். இதை கூந்தலில் தொடர்ந்து தடவி வந்தால் அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளும் நீங்கிடும்.

நெல்லிக்காய் மற்றும் ஆமணக்கு எண்ணெய்

நெல்லிக்காய் மற்றும் ஆமணக்கு இந்த இரண்டு பொருட்களுமே முடி உடைவு பிரச்சனையை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதை தயாரிக்க முதலில் ஒரு பாத்திரத்தில் ஆமணக்கு எனும் விளக்கெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் எண்ணெயை சம அளவில் கலந்து நன்றாக சூடேற்றவும். இப்போது இந்த எண்ணெயை தலைமுடியில் தடவி சிறிது நேரம் அப்படியே ஊற வைக்கவும். அதன் பிறகு ஷாம்பு போட்டு தலையை அலசிடவும். இந்த எண்ணெயும், கூந்தல் வெடிப்பை சரி செய்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும்.

Advertisement

Read Next