இரண்டே நாளில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறையனுமா? அப்ப இத செஞ்சு பாருங்க...
Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)
கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் அனைவரின் அழகையும் கெடுக்கும் விதமாக அமையும். கண்களை சுற்றி கருப்பு நிற வட்டங்கள் இருக்கும்போது ஒரு நபர் நோய்வாய்ப்படத் தொடங்குகிறார் என்பதைக் குறிக்கிறது. குறிப்பாக, கருவளையம் என்பது போதிய தூக்கமின்மையால் உண்டாகக்கூடியது. நீண்ட நேரம் லேப்டாப், கணினி, செல்போன் போன்றவற்றை பயன்படுத்தினால் கூட கருவளையம் வரக்கூடும். ஒரு முறை கருவளையம் வந்தால் அதை எப்படி போக்குவது என்ற பெரிய கவலை அனைவரையும் ஆட்கொள்ள கூடும். ஆனால், இனி அந்த கவலையே வேண்டாம். ஏனென்றால், 2 நாட்களில் கருவளையத்தைப் போக்க உதவும் வீட்டு வைத்தியங்களைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…
கருவளையத்தைப் போக்க வீட்டு வைத்தியம்
கற்றாழை ஜெல்
முதலில் கற்றாழை ஜெல்லை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதை சிறு பஞ்சுருண்டையின் உதவியுடன் கண்களுக்குக் கீழே மெதுவாக தடவவும். இதன்போது, உங்கள் கைகளால் அதிக அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஜெல்லை கண்களைச் சுற்றி தடவியதும், சுமார் 10-15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பிறகு ஒரு ஈரமான துண்டு அல்லது ஈரமான துணியால் ஜெல்லை துடைத்து விடவும். இந்த முறையை ஒரு நாளைக்கு 2 முறை செய்து வரவும். இப்படி செய்வதால், 2 நாட்களிலேயே உங்களால் வித்தியாசத்தைக் காண முடியும்.
மழைக்காலத்தில் இந்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்த்திடுவது நல்லதாம்…
மோர் மற்றும் மஞ்சள்
முதலில், மஞ்சள் மற்றும் மோர் இரண்டையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் தயாரித்து கொள்ளவும். அதன் பிறகு, இந்த பேஸ்ட்டை கண்களுக்குக் கீழே கருவளையம் உள்ள இடத்தில் தடவவும். பிறகு தடவிய பேஸ்ட் காய்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கவனமாக கழுவவும். இப்படி செய்து வர 2 நாட்களில் கருவளையம் குறைவதை நீங்கள் காண்பீர்கள். அதற்கு இந்த தீர்வை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்ய மறவாதீர்கள்.
இந்த 6 ராசிக்காரர்களை என்ன செய்தாலும் புரிந்து கொள்ளவே முடியாது…
க்ரீன் டீ பேக்குகள்
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி அதில் க்ரீன் டீ பேக்குகளை ஊற வைக்கவும். சிறிது நேரம் கழித்து கிரீன் டீ பேக்கை தண்ணீரில் இருந்து எடுத்து குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்து விடவும். டீ பேக் நன்கு குளிர்ச்சியடைந்ததும் எடுத்து, கண்களின் மேல் சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து குளிர்ச்சியை உணருங்கள். இது கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்கிடும்.