Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

தினமும் தூங்கி எழும்போது முகம் வீங்கி இருக்கா? இத செய்யுங்க வீக்கம் உடனே போய்டும்…

A
Admin User
Journalist
December 14, 2021 5 min read 54 views
தினமும் தூங்கி எழும்போது முகம் வீங்கி இருக்கா? இத செய்யுங்க வீக்கம் உடனே போய்டும்…

தினமும் காலை தூங்கி எழுந்து பார்க்கும் போது நம்முடைய வீங்கி காணப்படுவது பலருக்கு நேர்ந்திருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்க தான் செய்கிறது. மனஅழுத்தம், நீர் தேக்கம் முதல் சரும அழற்சி வரை இதற்கான காரணங்கள் பல உண்டு. இதற்காக வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. ஒரு சில மருந்துவ நிலைகளை தவிர மற்ற அனைத்து முக வீக்கமும் நிரந்தமானவை கிடையாது. எனவே, உங்கள் அன்றாட பணிகளுக்கு நடுவில் சிறிது நேரத்தை ஒதுக்கினால் போதும் முக வீக்கம் காணாமல் போய்விடும். இந்த சுலபமான 5 டிப்ஸ்களை ட்ரை செய்து பாருங்கள், முக வீக்கத்தை ஈஸியாக விரட்டிடலாம்…

தண்ணீர் நிறைய குடிக்கவும்

முக வீக்கத்திற்கு மிகவும் எளிய வைத்தியம் என்றால் அதிக அளவு தண்ணீர் குடிப்பது மட்டுமே. உடலில் எப்போது வறட்சி ஏற்படுகிறதோ, அப்போது உடலில் இருக்கும் நீர் முழுவதையும் உடல் செல்கள் மற்றும் தசைகள் உறிஞ்சி வைத்துக் கொள்ளும். அதனால் தான் முக வீக்கம் ஏற்படுகிறது. எனவே, தண்ணீர் அதிகமாக குடிக்கும் போது, நீரை உறிஞ்சி சேமித்து வைத்திருக்கும் செல்கள், நீரை வெளியேற்றிவிடும் என, வீக்கமும் உடனே குறைந்திடும்.

தயிர் சாப்பிடவும்
பால் பொருட்களான பால் மற்றும் சீஸ் போன்றவை வீக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால், பாலின் மற்றொரு பொருளான தயிர் வீக்கத்தை குறைக்கக்கூடியது. ஏனென்றால், தயிரில் சர்க்கரை குறைவாக இருப்பதோடு, நன்மை பயக்கக்கூடிய ப்ரோபயாடிக்களை கொண்டிருப்பதால் அது அடிக்கடி வீக்கம் ஏற்படுவதை குறைத்திட உதவும்.

ஐஸ் கட்டி
ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் வைத்து வீக்கம் இருக்கும் இடங்களின் மீது வைத்து எடுக்கும் போது வீக்கம் போய்விடும். எனவே, காலை எழுந்தவுடன் ஐஸ் கட்டிகளை ஒன்று அல்லது 2 நிமிடங்களுக்கு வைத்தெடுத்தாலே போதும் வீக்கம் மறைந்திடும்.

உருளைக்கிழங்கு
சருமத்திற்கு அதிகமான குளிர்ச்சியை தரக்கூடிய காய்களில் ஒன்று தான் உருளைக்கிழங்கு. எனவே, வேக வைக்காத உருளைக்கிழங்கை எடுத்து ஒரு துண்டாக நறுக்கி கன்னங்களின் மீது சிறிது நேரம் தேய்ப்பதனால் வீக்கம் மறைந்திடும். மேலும், நறுக்கிய உருளைக்கிழங்கை 15 நிமிடங்களாவது முகத்தின் மீது வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவி விடவும்.

முல்தானிமெட்டி ஃபேஸ் மாஸ்க்
முகத்திற்கு ஏற்ற பியூட்டி மாஸ்க் என்றால் அது முள்தானிமெட்டி தான். இதில், அற்புதம் நிகழ்த்தக் கூடிய வெளுக்கும் பண்புகள் உள்ளதால் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் பரு தடங்களை போக்கிவிடும். மேலும், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை போக்குவதில் மட்டும் இந்த ஃபேஸ் மாஸ்க் சிறந்ததல்ல, முக வீக்கத்தையும் சுலபமாக நீக்கிடும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க