ஆன்மீகம்

கும்பத்தில் செவ்வாய் இருக்கும் வரை இந்த ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம் தான்...

A
Admin User
1 min read
கும்பத்தில் செவ்வாய் இருக்கும் வரை இந்த ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம் தான்...
Advertisement
Editor's Choice
Affiliate link

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

வேத சாஸ்திர ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை கிரகப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறினால், அது அனைத்து ராசிகளிலும் விளைவுகளை உண்டாக்கக்கூடும். அதிலும், செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதி அந்தஸ்தில் உள்ளவர். அவர் ஒரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது மோசமான விளைவாகவே இருக்கக்கூடும். செவ்வாய் பகவான் கடந்த 7 ஆம் தேதி மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இப்போது அவர் மே 17 வரை கும்ப ராசியிலேயே சஞ்சரிப்பார். மே 17ம் தேதி அன்று காலை 09:30 மணி அளவில் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் பகவனானில் இந்த ராசி மாற்றத்தின் பலன் 12 ராசிகளிலும் உண்டாகும். அதிலும், இதன் தாக்கம் நிலம், தைரியம் மற்றும் வலிமை போன்றவற்றை பாதிக்கக்கூடும். செவ்வாயின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்…

கடகம்
கடக ராசிக்காரர்களின் எட்டாம் வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சரித்துள்ளார். இந்த பெயர்ச்சி காலத்தில், உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடலாம். இதுதவிர, உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் முதலாளிக்கு உங்களது வேலையில் திருப்தி குறைவு ஏற்படலாம். பணம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவும். வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் மோசமடையக்கூடும். அவசர அவசரமாக எதையும் செய்யாதீர்கள். இல்லையெனில், காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களின் ஐந்தாம் வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி ஆகியுள்ளார். இந்த பெயர்ச்சி காலத்தில் உங்கள் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைக் காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் அலுவலக அரசியலில் சிக்கி வீணாக பாதிக்கப்படலாம். எனவே, எப்போதும் மிக கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலையில் திடீர் சரிவு ஏற்படலாம். எனவே, தவறான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையுடனான உங்களது உறவில் விரிசல் ஏற்படலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பெயர்ச்சி ஆகியுள்ளார். இதன் காரணமாக உங்களின் நடத்தையில் சில மாற்றங்களைக் காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் திடீர் பிரச்சனைகள் வரலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். மேலும், உங்களத பொருளாதார நிலையும் சுமாராகவே இருக்கும். தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.

Advertisement

Read Next