ஆன்மீகம்

அடுத்த 5 நாட்களுக்கு இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

A
Admin User
1 min read
அடுத்த 5 நாட்களுக்கு இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...
Advertisement
Editor's Choice
Affiliate link

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

வேத சாஸ்திரத்தில் கிரகங்களின் இயக்கம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்களின் இயக்கம் அனைத்து 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கக்கூடும். வாரந்தோறும் கிரகங்களின் இயக்கத்தை வைத்து ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் கிரகங்களின் சஞ்சாரத்தால், வரும் வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாக அமைந்தாலும், சில ராசிக்காரர்கள் மிகமிக கவனமாக இருக்க வேண்டும். எனவே, வருகின்ற அடுத்த 5 நாட்களுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

மேஷம்
அடுத்த 5 நாட்களுக்கு மேஷ ராசிக்காரர்கள் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் உங்களது தன்னம்பிக்கை குறையக்கூடும். அதுதவிர, அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்க வேண்டியது அவசியம். தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசினால், உங்களது குடும்பப் பொறுப்புகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த நேரத்தில் இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

ரிஷபம்
இந்த வாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பொறுமை மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, முடிந்தவரை அனைத்து விஷயங்களில் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். மாணவர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் கல்வி சார்ந்த பணிகளில் இடையூறு ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணி சுமை மிகுதியாக இருக்கும். அதுதவிர, இந்த வாரம் உங்கள் வருமானத்திற்கும் இடையூறு ஏற்படலாம். திருமணமானவர்களுக்கு, அவர்களது திருமண வாழ்வில் திடீர் பிரச்சனைகள் உருவாகலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பேச்சில் நிதானம் தேவை. ஏனென்றால், உங்கள் பேச்சில் இருக்கும் கடுமை அன்புக்குரியவரை வருத்தமடைய செய்யும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கலாம். இந்த நேரத்தில், உங்கள் தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே, இந்த நேரத்தில் மிகவும் பொறுமையாக இருங்கள். முயன்றவரை, வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. என்றும் இல்லாத அளவிற்கு இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கடகம்
இந்த வாரம் முழுவதும் உங்கள் நம்பிக்கையின் அளவு குறைந்தே காணப்படும். இருப்பினும், மிகவும் அமைதியாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இந்த காலக்கட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உங்கள் நிதி நிலையில் திடீர் சரிவு ஏற்படலாம். ஆரம்பர செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும், உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காமல் வருந்த நேரிடலாம்.

Advertisement

Read Next