Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

புதாதித்ய யோகத்தால் இந்த ராசிக்காரர்களின் தலையெழுத்தே மாறப் போகிறது...

A
Admin User
Journalist
April 20, 2022 6 min read 49 views
புதாதித்ய யோகத்தால் இந்த ராசிக்காரர்களின் தலையெழுத்தே மாறப் போகிறது...

புதன் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் ஏதேனும் ஒரு ராசியில் ஒன்றாக சஞ்சரித்தால், இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை புதாதித்ய யோகம் என்றழைக்கப்படும். வேலை, வியாபாரம், பேச்சுதிறன் போன்றவற்றின் அதிபதியாக புதன் கருதப்படுகிறார். அதுவே, சூரியன் தைரியம், பதவி, மதிப்பு மற்றும் ஆட்சி நிர்வாகம் போன்றவற்றின் அதிபதியாகக் கருதப்படுகிறார். எனவே, இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் இந்த யோகம் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசியில் சஞ்சரித்தார். புதன் ஏப்ரல் 8 ஆம் தேதி மீன ராசிக்கு சென்று ஏப்ரல் 25 ஆம் தேதி வரை அங்கேயே இருக்கும். இதன் பிறகு மார்ச் 15 ஆம் தேதி முதல் மீன ராசியில் சஞ்சரித்த சூரியன் ஏப்ரல் 14 ஆம் தேதி மேஷ ராசியில் நுழைந்துள்ளார். எனவே, ஏப்ரல் 14 முதல் 25ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மேஷ ராசியில் புதாதித்ய யோகம் உருவாகும். மேஷ ராசியில் புதன் சஞ்சரிப்பது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

மேஷம்
புதன் மேஷ ராசியின் முதல் வீட்டில் சஞ்சரித்துள்ளார். அத்தகைய சூழ்நிலையில், இந்த நேரத்தில் உங்கள் தைரியம், நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை மேலோங்கி காணப்படும். இந்த நேரத்தில் வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதன் மூலம் மிகுந்த நன்மை பயக்கும். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுதவிர, புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இதனால், உங்கள் நிதி நிலைமை மேலோங்கும். மேலும், இந்த காலக்கட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும்.

ரிஷபம்
புதன் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இந்த நேரத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். வெளியூர் சென்று வியாபாரம் செய்பவர்கள் எதிர்பாராத பெரிய ஆதாயமடைவார்கள். மாணவர்கள், உயர்கல்வி பயில விரும்பி முயற்சித்து வந்தால், இந்த காலக்கட்டத்தில் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறலாம். நிதி நிலை பற்றி பேசினால், புதிய வருமான ஆதாரங்களால் நல்ல பலன்களைப் பெறலாம். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

மிதுனம்
புதன் உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இதனால் உங்கள் ராசி முழுவதையும் புதன் ஆட்சி செய்கிறார். எனவே, புதன் பெயர்ச்சி உங்களது ராசிக்கு மிகவும் சாதகமாகவே இருக்க போகிறது. தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்துவந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். திடீர் பண வரவுகள் இருக்கும். இதனால் உங்கள் நிதி நிலைமையில் ஏற்றம் உண்டாகும். பழைய கடன்களை இந்த காலக்கட்டத்தில் அடைத்திடலாம்.

சிம்மம்
புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை மிகவும் வலுவாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பாதைகளில் இருந்துவந்த தடைகளில் இருந்து விடுபடுவார்கள். சமூகத்தில் உங்கள் கௌரவம் உயரும். இதனால் புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசினால், உங்கள் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, மகிழ்ச்சி நிலைக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க