Sunday, May 10, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

தாய் பேசில் சிக்கன்!!!

A
Admin User
Journalist
February 18, 2022 5 min read 83 views
தாய் பேசில் சிக்கன்!!!

ஒரு வித்தியாசமான உணவு முறையில் சமைத்து கொடுத்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை அசத்த விரும்புபவரா நீங்கள்? அப்படியெனில், இந்த பதிவு உங்களுக்கானது. இங்கே, சிக்கனை வைத்து தாய் ஸ்டைலில் ஒரு அட்டகாசமான தாய் பேசில் சிக்கன் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு சூப்பரான ஸ்டாட்டர். இதை ஈவினிங் டைமில் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் எத்தனை நாட்களுக்கு தான் ஒரே மாதிரியாக சமைத்து கொண்டிருப்பது. சற்று வித்தியாசமாக க்விசினில் சமைத்து உங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். வாருங்கள், இப்போது தாய் பேசில் சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் - 300 கிராம்
  • முட்டை - 1
  • சோள மாவு - 1/4 கப்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
  • துளசி இலைகள் - 5
  • பச்சை குடைமிளகாய் - 1 (நீளமாக நறுக்கியது)
  • எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

சாஸ் தயாரிப்பதற்கு…

  • சிவப்பு மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
  • சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
  • சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
  • தக்காளி கெட்சப் - 1 டீஸ்பூன்
  • சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 1 கப்

செய்முறை:

  • முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவும்.
  • பின்னர், ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் சோள மாவு, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி கொள்ளுங்கள்.
  • இப்போது அந்த கலவையுடன் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை சேர்த்து, சிறிது நீர் தெளித்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
  • சிக்கனைப் பிரட்டிய முட்டை கலவையானது, மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீராகவும் இல்லாமல், ஓரளவிற்கு சிக்கனுக்கு நல்ல கோட்டிங் கொடுக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைக்கவும்.
    *இப்போது, சாஸ் தயாரிக்கும் முறையைத் தெரிந்து கொள்ளலாம்.
  • ஒரு மிக்சர் ஜாரில், சிவப்பு மிளகாய், பூண்டு ஆகியவற்றைப் போட்டு நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பௌலில் சாஸ் தயாரிப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள சில்லி சாஸ், சோயா சாஸ், கெட்சப், சோள மாவு மற்றும் அரை கப் நீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • இப்போது ஒரு சாஸ்பேனை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் அரைத்து வைத்துள்ள மிளகாய் பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி, பின் குடைமிளகாயை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
  • பிறகு அதில் கலந்து வைத்திருக்கும் சாஸ் கலவையை ஊற்றி நன்க கிளறி விட வேண்டும். சாஸ் கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, இறுதியாக துளசி இலைகளை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான தாய் பேசில் சிக்கன் தயார்.

Image Courtesy: archanaskitchen

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,150
தங்கம் (24k)
1 கிராம்
₹14,858
வெள்ளி
1 கிராம்
₹280
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நலமான வாழ்விற்கு எது மிக முக்கியம்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க